ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையில் தற்போது உள்ள விவரங்களை பார்ப்பது எப்படி..?

Advertisement

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இன்றைய நிலையில் நம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். உலகமே உள்ளங்கையில் இருக்கிறது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன். அதுபோல ஸ்மார்ட் போனில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். அதாவது நம்மிடம் சில முக்கியமான ஆவணங்கள் இருக்கும் அல்லவா..!

உதாரணத்திற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை தான் கூறுகிறேன். அப்படி இருக்கும் முக்கிய ஆவணங்களில் வாக்காளர் அட்டையும் ஓன்று. இதுபோன்ற ஆவணங்களில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விவரங்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி?

How To Check Voter Id Card Details Online in Tamil:

Step – 1

முதலில் Google Chrome உள்ளே சென்று அதில் Search Bar இல் nvsp.in என்று டைப் செய்து வாக்காளர் அட்டையின் அதிகாரபூர்வ https://www.nvsp.in/ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

Step – 2 

voters

பின் அதில் https://voters.eci.gov.in என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் முக்கியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Step – 3 

Search In Electoral Roll

பின் புதியதாக ஒரு திரை தோன்றும். அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Search In Electoral Roll என்ற ஒரு பாக்ஸ் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

Step – 4

Search By Details, Search by EPIC, Search by Mobile

அடுத்து ஒரு திரை ஓபன் ஆகும். அதில் உங்களுடைய வாக்காளர் அட்டையில் இருக்கும் விவரங்களை 3 வழிகளில் தெரிந்து கொள்ளலாம். அதாவது Search By Details, Search by EPIC, Search by Mobile என்ற 3 ஆப்சன் இருக்கும்.

இதில் நீங்கள் உங்கள் முகவரிகளை கொடுத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அல்லது வாக்காளர் எண்ணை கொடுத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதேப்போல வாக்காளர் அட்டையில் இணைந்திருக்கும் மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலம் இணைக்கலாம்

Step – 5 

Search By Details

இப்பொழுது நீங்கள் Search By Details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். பின் அதில் கீழ் சில விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய State, பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.

Step – 6 

விவரங்களி கொடுத்த பின் அதன் கீழ் இருக்கும் Verify என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் Search என்று கொடுத்தால் உங்களுடைய வாக்காளர் அட்டையில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement