கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி? – Covid Vaccine Certificate Download Online in Tamil
வணக்கம் நண்பர்களே.. கோவிட் 19 தடுப்பூசி நம்மைப்பில் பலர் இரண்டு டோஸ் ஊசிகளை செழித்துக்கொண்டிருப்போம். ஆனால் நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்ற சான்றிதழை பெற்றிருக்க மாட்டோம். கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை கோவின் இணையதளத்தின் மூலம் அரசு வழங்கி வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம், அதேபோல் ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இத்தகைய இணையதளங்களில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று தெரியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?
நீங்கள் இந்த கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை மிக எளிதாக பலவகையான வழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதாவது கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், டிஜிலாக்கர் தளத்தின் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். எதுவுமே இல்லை என்றால் வாட்ஸ்அப்பின் மூலம் கூட கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பெற முடியும். முதலில் நாம் கோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ் எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப்: 1
முதலில் நீங்கள் https://www.cowin.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
ஸ்டேப்: 2
அவற்றில் மேல்பக்கம் வலதுபுற மூலையில் இருக்கும் Register / Sign in-ஐ என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 3
பின் இன்னொரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் Enter Your Mobile Number என்ற இடத்தில் நீங்கள் தடுப்பூசி போடும் போது கொடுத்த மொபைல் எண்ணினை டைப் செய்யுங்கள். பின் Get OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
Get OTP என்பதை கிளிக் செய்த உடன் உங்கள் தொலைபேசி எனிற்கு ஒரு OTP எண் வரும் அவகற்றி Enter OTP என்பதால் உள்ளிட்டு, Verify & Proceed என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 5
பின்னும் நீங்கள் CoWIN இயங்குதளத்தில் இருந்து தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும். இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |