How To Find Aadhar Card Linked Mobile Number
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவரிடமும் ஆதார் கார்டு இருக்கும். ஆதார் கார்டு தான் நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை கொடுக்கிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்த உலகில் நமக்கு இருக்கும் அடையாளமே ஆதார் அட்டை தான். அதுபோல அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை தான் பயன்படுத்தபடுகிறது. அப்படி பயன்படும் ஆதார் அட்டையை நாம் சிறுவயதில் எடுத்திருப்போம்.
அதனால் அதில் சிலருக்கு பெயர் பிழை இருக்கும். சிலருக்கு முகவரி மாற்றம் இருக்கும், இன்னும் சிலருக்கு அல்ல பலருக்கும் இருக்கும் பிரச்சனை தான் மொபைல் நம்பர் மாற்றம். நாம் சில நேரங்களில் வேற மொபைல் நம்பர் மாற்றியிருப்போம். ஆனால் ஆதார் கார்டில் வேற மொபைல் நம்பர் இருக்கும். அப்படி ஆதார் கார்ட்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரை கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How To Find Aadhar Card Linked Mobile Number in Tamil:
ஸ்டேப் – 1
முதலில் Google Chrome உள்ளே செல்ல வேண்டும். பின் ஆதாரின் அதிகாரபூர்வ https://ask.uidai.gov.in/ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் MOBILE எண் மாற்றம் செய்வது எப்படி |
ஸ்டேப் – 2
அடுத்து கொஞ்சம் கீழே நகர்த்தி செல்ல வேண்டும். அதில் Aadhar Services என்ற ஆப்சன் இருக்கும்.
ஸ்டேப் – 3
அதில் Verify An Aadhar Number என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி..?
ஸ்டேப் – 4
அடுத்து ஒரு புதிய திரை தோன்றும். அதில் உங்களுடைய ஆதார் அட்டையின் நம்பரை உள்ளிட வேண்டும். பின் அதற்கு கீழ் இருக்கும் இடத்தில் Captcha எழுத்துக்களை சரியாக உள்ளிட வேண்டும்.
ஸ்டேப் – 5
அதற்கு அடுத்து Proceed and verify aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான். இப்போது ஒரு புதிய திரை தோன்றும். அதில் கீழே கொஞ்சம் நகர்த்தி சென்றால், அங்கு உங்களுடைய ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரில் கடைசி 3 எண்கள் மட்டும் தோன்றும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில்நுட்ப செய்திகள் |