How To Get WiFi Signal Stronger in Tamil
இப்போது பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வைஃபை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போன்ற பல காரணங்களால் வைஃபையின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதாவது Wifi அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது என்றே சொல்லலாம். Wifi வாங்கும் போது நன்றாக செயல்படும். ஆனால் போக போக வைஃபையின் வேகம் குறைந்து கொண்டே போகும். இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததே காரணம் ஆகும். Wifi பொருத்தும் இடத்தை பார்த்து பொருத்துவது மிகவும் அவசியம். அதாவது எந்த இடத்தில Wifi பயன்படுத்துவீர்களோ அதற்கு பொதுவான இடத்தில் Wifi -ஐ பொருத்துவது நல்லது. ஓகே வாருங்கள் Wifi வேகமாக செயல்பட என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How To Get the Best WiFi Signal in Tamil:
WiFi ரூட்டரை சமமாக உள்ள இடத்திலும் பொருட்கள் இடையூறு இல்லாத இடத்திலும் பொறுத்த வேண்டும். மேலும் வைஃபையில் இருந்து வரும் வயர்லெஸ் சிக்கனல்கள் அருகில் உள்ள வீட்டிலிருந்து வரும் சிக்னல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் வைஃபையிற்கு என்று தனியாக வயர்லெஸ் சேனலை அமைத்து கொள்வது நல்லது.
ஆம்னி டைரக்சனல் (Omni-directional) ஆண்ட்டனாக்கள் என்பது அனைத்து திசைகளிலும் சிக்னலை பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் உங்கள் வீட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வைஃபை பயணப்படுத்துவீர்கள் என்றால் இந்த Omni-Directional Antenna -வை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் வைஃபை பயன்படுத்துவீர்கள் என்றால் Directional Antenna பயன்படுத்துவது நல்லது.
உங்க போனில் WiFi இருக்கா..? அப்போ இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!
இந்த Directional Antenna ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வைஃபை சிக்னலை ஃபோகஸ் செய்வதன் மூலம் Omni-Directional Antenna -வை விட அதிக வேகத்தில் சிக்னல் கிடைக்கிறது. இதனை High Gain என்று கூறுவர்.
WiFi சிக்னலை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி ரிப்பீட்டரை பயன்படுத்துவது. ரிப்பீட்டர்கள் புதிதாக சிக்னலை உருவாக்கலாம் ஏற்கனவே இருக்கும் சிக்கனல்களை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் சிக்னல் பூஸ்ட் ஆகி சிக்னல் வேகமாக கிடைக்கும். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ரிப்பீட்டர்களை இன்ஸ்டால் செய்வதன் மூலம் தடையற்ற வைஃபை சிக்னலை பெறலாம்.
மேலும் ரூட்டர் உற்பத்தியாளர்கள் Firmware அப்டேட்களை வெளியிடுவர். எனவே அவற்றை பயன்படுத்தி உங்கள் ரூட்டரை Upgrade செய்வது மிகவும் அவசியம். ரூட்டரை Upgrade செய்வதன் மூலம் வைஃபை சிக்னல் பூஸ்ட் ஆவது மட்டுமில்லாமல் புதிய அம்சங்களை பெறவும் உதவியாக இருக்கும். இதற்கு Third Party Firmware –களை பயன்படுத்தி பயனடையலாம்.
பாதுகாப்பான Firmware -கள் பிளே ஸ்டோரில் நிறைய உள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தி WiFi சிக்னலை பூஸ்ட் செய்து சிறந்த வைஃபை சிக்னலை பெறலாம்.
QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |