Recover Gmail Account in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைவருமே Smart Phone பயன்படுத்தி வருகிறோம். நாம் ஸ்மார்ட் போன் வாங்கியதும் முதலில் Email ID தான் ஓபன் செய்வோம்.
Email ID ஓபன் செய்தால் தான் நம்மால் ஸ்மார்ட் போனை பயன்படுத்த முடியும். அதுபோல சில சமயங்களில் நம் போனில் இருக்கும் Email ID Delete ஆகிவிட்டால் என்ன செய்வது..? அதே Email ID -யை எப்படி ஓபன் செய்வது என்று தெரியாமல் பலரும் குழம்புவீர்கள். அப்படி இருப்பவர்கள் இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Recover Gmail Account in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய Google ஆப் உள்ளே செல்லுங்கள். அடுத்து உங்கள் Email Id யை கிளிக் செய்தால் கீழே Add Another Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -2
பின் அதில் Forgot Email என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து அதில் உங்களுடைய மொபைல் நம்பரை Enter செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
அடுத்து ஒரு திரை தோன்றும் அதில் First Name மற்றும் Last Name என்ற இரண்டு ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய Delete ஆன Gmail -ன் First Name மற்றும் Last Name யை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் -4
அடுத்து உங்கள் போனிற்கு OTP send செய்ய வேண்டுமா என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து Send என்று கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு உங்களுடைய போனிற்கு ஒரு OTP எண் வரும். அதை Enter The Code என்ற கட்டத்தில் கொடுத்து Next என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்க போன் Email Password மறந்து விட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்க..! |
ஸ்டேப் -6
அடுத்து உங்களுடைய Delete ஆன Gmail ID அங்கு இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -7
அதில் உங்களுடைய Delete ஆன Gmail ID -ன் பாஸ்வேர்ட் கேட்கும். அது தெரியவில்லை என்றால், கீழே இருக்கும் Forgot Password என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -8
மறுபடியும் உங்களுடைய Password கேட்கும். அதற்கு நீங்கள் கீழே இருக்கும் Try Another Way என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -9
பிறகு உங்களுடைய போனிற்கு ஒரு OTP எண் வரும். அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -10
பின் உங்களுடைய Delete ஆன Gmail ID -க்கு புதிதாக ஒரு Password கொடுத்து Enter செய்யுங்கள்.
ஸ்டேப் -11
பின் ஒரு திரை தோன்றும். அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழே Continue To Email என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே..! உங்களுடைய Delete ஆன Gmail இப்போது உங்களுடைய போனில் Sign In செய்யப்பட்டு விடும்.
உங்களுடைய போன் மூலம் கம்ப்யூட்டரில் இருக்கும் ஈமெயிலை logout செய்வது எப்படி..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |