உங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

Advertisement

கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..!

மாதம் மாதம் நமக்கு எத்தனையோ செலவுகள் வருகின்றது. மளிகை பொருள் வாங்கும் செலவு, வாடகை செலவு, அதோடு சேர்த்து கரண்ட் பில் செலவு அதனை சமாளிப்பதுதான் பெரிய வேலையாக இருக்கிறது. அதற்கு சூப்பரான ட்ரிக்ஸ்லாம் இருக்கிறது. மாதம் மாதம் கரண்ட் பில் உயர்ந்துகொண்டே இருக்கிறதா? இதை எப்படி குறைப்பது என்ற கவலையா? இனி கவலையை விடுங்க இந்த TRICKS- ஐ try பண்ணுங்க…

ஏசி:

கோடை காலத்து வெப்பத்தில் இருந்து தப்பிக்க நம் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஏசியை பயன்படுத்துவோம். இருப்பினும் இந்த ஏசி, அறையை குளிர்விக்கும் பணிகளை செய்தாலும், மாதம் மாதம் கரண்டு பில்லின் விலையை உயர்த்தும் பணியையும் சேர்த்து செய்கிறது.

இருப்பினும், ஏசியையும் பயன்படுத்த வேண்டும். அதேபோல் கரண்டு பில்லையும் குறைக்க வேண்டுமா? அப்போ உங்கள் ஏசியின் டெம்பரேச்சர் அளவை 24 அல்லது 25 என்று குறைத்து வைத்தோம் என்றால் உங்கள் அறையானது போதுமான குளிர்ச்சி நிலையில் இருப்பதோடு, கரண்டு பில்லையும் (electricity bills) குறைத்துவிட முடியும்.

குண்டு பல்ப் (Incandescent Light Bulb):

பலரும் தங்களது வீட்டில் இன்னமும் பயன்படுத்தி வரும் ஒரு பல்புதான் Incandescent light, இந்த குண்டு பல்பின் விலை பத்து ரூபாயாக இருந்தாலும், CFL மற்றும் LED பல்புகளை காட்டிலும் பத்து மடங்கு மின்சாரத்தை விழுங்கக்கூடியது. எனவே இன்று முதல் குண்டு பல்ப்பை பயன்படுத்துவதை தவிர்த்து கொண்டு, CFL மற்றும் LED பல்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

மேலும் பலருக்கு இன்று வரை தங்கள் வீட்டு அறைகளில் எத்தனை வார்ட் திறன்கொண்ட பல்புகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. குறிப்பாக தங்களது குளியல் அறை மற்றும் கழிவறையில் அதிக வெளிச்சம் நிறைந்த பல்புகளை பொருத்தி இருப்பார்கள். சிலர் குளியல் அறை அல்லது கழிவறை சென்றுவிட்டு பல்ப்பை நிறுத்திவிட மறந்துவிடுவார்கள். இதனால் அதிக மின் இழப்பு ஏற்படும். எனவே அதிகம் வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் மிக குறைந்த வார்ட் திறன் கொண்ட பல்புகளை பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்வதினால் தேவையற்ற மின் இழப்பு ஏற்படுவதை தடுத்து, கரண்டு பில் விலையையும் குறைத்துவிட (electricity bills) முடியும்.

எலெட்ரானிக் சாதனங்கள்:

டிவி, டிவிடி பிளேயர் மற்றும் மியூசிக் சிஸ்டம் போன்ற எலெட்ரானிக் சாதனங்களை பயன்படுத்திய பிறகு அவற்றை சுச்சாப் செய்வதற்கு நாம் மறந்துவிடுவோம். இவ்வாறு செய்வதினால் சார்சரில் மிக குறைந்த அளவில் மின் இழப்பு நிகழும்.

எனவே எலெட்ரானிக் சாதனங்களை பயன்படுத்திய பிறகு சுச்சாப் செய்யவேண்டியது மிகவும் அவசியம். இதனாலும் மின் இழப்பை குறைத்துவிட முடியும்.

அதேபோல் பழைய CRT TV மற்றும் பழைய கம்ப்யூட்டர் மானிட்டர் மிக அதிக அளவு மின்சாரத்தை விழுங்கக்கூடியது. எனவே பழைய CRT TV மற்றும் பழைய கம்ப்யூட்டர் மானிட்டர் ஆகியவற்றை ஏதேனும் offer வரும்போது புதிதாக மாற்றிவிடுங்கள். இவ்வாறு செய்வதினால் மின் இழப்பை குறைத்துவிட முடியும்.

அதேபோல் உங்கள் வீட்டு நீர் மோட்டரை அடிக்கடி பரிசோதித்து, ஆயில் சர்விஸ் செய்து நன்றாக இயங்குமாறு வைத்துக்கொள்ளவும். ஏனெனில் கடினமாக இயங்கும் இந்த நீர் மோட்டாரால் அதிக மின்சாரத்தை விழுங்குவதை குறைத்துவிட (electricity bills) முடியும்.

ஃபிரிட்ஜ்:

கரண்ட் பில்லில் மாதம் மாதம் 25% இடத்தை பெற்றுகொள்கிறது, இந்த குளிர்சாதன பெட்டி. எனவே ஃபிரிட்ஜ்ன் குளிர்விக்கும் திறனை குறைவாக வைத்து கொள்ளவும். அதே போல் அடிக்கடி ஃபிரிட்ஜ்குள் இருக்கும் லபரை பரிசோதித்து, ஃபிரிட்ஜ்யில் இருந்து குளிர்காற்றுகள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் மின் இழப்பை குறைத்துவிட முடியும்.

எலட்ரிக் அடுப்பை பயன்படுத்துபவர்கள், சமைத்து முடிப்பதற்கு முன் குறிப்பிட்ட நேரத்திற்குள் அடுப்பை ஆப் செய்துவிடவதன் மூலம் அடுப்பில் மீதி இருக்கும் வெப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மின்சாரமும் வீணாகாது, அடுப்பில் இருக்கும் வெப்பமும் வீணாகாது.

அதே போல் மைக்ரோ ஓவன் பயன்படுத்தி சமைப்பவர்கள் ஃபிரிட்ஜ்-ல் வைத்திருக்கும் எந்த ஒரு பொருட்களையும் சில நேரத்திற்கு முன் வெளியே எடுத்து வைத்துவிட்டு, பின்பு மைக்ரோ ஓவனில் வைத்து சமைப்பதினாலும் மின்சாரம் உயர்வதை தடுக்க முடியும்.

வாஷிங் மிசின்:

துணி துவைக்கும் போது வாஷிங் மிஷினை எப்போதும் குறைந்த லோடில் அல்லது ஓவர் லோடில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளவும். இந்த இரண்டு முறையும் அதிக மின்சார இழப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் தேவையான அளவு தண்ணீர், சரியான அளவு டிடர்ஜண்ட் பவுடரையும் வாஷிங் மிஷினில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு செய்வதினால் வாஷிங் மிஷின் துணிதுவைக்க நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

மேலும் துணிதுவைத்த பிறகு வாஷிங் மிஷின் சேன்ட்பைமோடில்(standby mode) இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு செய்வதினால் மின்சாரத்தை மிச்சம் செய்ய முடியும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

 

கரண்ட் பில் கம்மியா வர எத்தனை ஸ்டார் உள்ள AC வாங்கணும் தெரியுமா.?

 

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

Advertisement