Gpay UPI Pin in Tamil
இன்றைய பதிவில் Gpay யில் UPI Pin மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Gpay, Phone Pay, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மற்றும் பண பரிமாற்றம் செய்து செய்து வருகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் Gpay யில் UPI Pin சிலநேரம் மறந்துவிடும். அப்படி Gpay -ல் Upi Pin மறந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாதவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How To Reset Gpay UPI Pin in Tamil:
ஸ்டேப் -1
உங்கள் Gpay உள்ளே செல்ல வேண்டும். பின் மேலே உங்கள் Profile Picture இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
அடுத்து ஒரு திரை தோன்றும். அதில் Bank Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் நீங்கள் பயன்படுத்தும் Bank Account அங்கு இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டேப் -3
பின் அதில் பல ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கீழே இருக்கும் Forgot UPI PIN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4
அடுத்து உங்களுடைய ATM கார்டில் இருக்கும் கடைசி 6 எண்களை கொடுக்க வேண்டும். பின் கீழே ATM கார்டில் கொடுக்கப்பட்டுள்ள Expiry Date -ம் கொடுத்து Enter செய்ய வேண்டும்.
G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..? |
ஸ்டேப் -5
பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு உங்கள் Bank Account -ல் இருந்து ஒரு OTP எண் வரும். அந்த எண்ணை Enter OTP என்பதில் பதிவு செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
அடுத்து Set UPI Pin என்று கேட்கும். அதில் நீங்கள் புதிதாக ஒரு UPI Pin கொடுக்க வேண்டும்.
பின் Confirm Re-Enter Your new UPI Pin என்று கேட்கும். அதில் நீங்கள் மறுபடியும் முதலில் கொடுத்த UPI Pin கொடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது உங்களுடைய புதிய UPI Pin UPDATE ஆகிவிட்டது. UPI Pin மறந்துவிட்டால் இதுபோல செய்து UPI Pin –யை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.? |
Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |