How To Send 100 Photos on Whatsapp in Tamil
வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸப்பில் புது புது அம்சங்கள் கொண்டுவந்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் இப்போது வாட்ஸப்பின் புதிய அப்டேட்டில் 100 போட்டோக்களையும் மற்றும் 100 வீடியோக்களையும் ஒரே நேரத்தில் அனுப்பக்கூடிய வசதி வந்துள்ளது. வாட்ஸப் பயன்படுத்துபவர்கள் இவ்வசதியை பற்றி அறியவில்லை என்றால் இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே செயல்படும். ஓகே வாருங்கள் வாட்சப்பின் புதிய அப்டேட்டில் வெளிவந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How To Send 100 Photos, Videos on Whatsapp in Tamil:
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பக்கூடிய புதிய அம்சத்தை வாட்ஸப் அறிவித்துள்ளது. இது இதற்கு முன்னால் இருந்த வரம்பான 30 லிருந்து 70 எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் ஆன வாட்ஸ்அப் வெர்ஷன் 2.22.24.73 -ல் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது
வாட்ஸப்பில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவது எப்படி..?
முதலில் உங்கள் வாட்ஸப் 2.22.24.73 என்ற வெர்ஷனிற்கு அப்டேட் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.அப்படி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் Google Play Store -க்கு சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது வாட்ஸப்பில் யாருக்கு புகைப்படங்களை அல்லது வீடியோக்களை அனுப்ப வேண்டுமோ அவர்கள் சாட்டிற்கு செல்லவும் அல்லது நீங்கள் குரூப்பில் அனுப்ப வேண்டும் என்றால் குரூப்பிற்கு செல்ல வேண்டும்.
டிஸ்பிளேவின் அடிப்பகுதியில் இருக்கும் இணைப்பு ஐகானை கிளிக் செய்யவும். பிறகு கேலரிக்கு சென்று 100 புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போது தேர்வு செய்து வைத்துள்ள 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே கிளிக்கில் பிறருக்கு அனுப்பி விடலாம்.
வாட்ஸ்சப்பில் தவறுதலாக அனுப்பிய Massage-ஐ Delete செய்வதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |