உங்க போன்ல Battery சீக்கிரமாவே தீர்ந்து விடுகிறதா..? அப்போ இந்த Settings மாத்துங்க போதும்..!

Advertisement

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று கேட்பீர்கள். ஆமாம் இன்றைய நிலையில் யாரிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்குறது சொல்லுங்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் போன் வந்த போது ஒரு சிலரிடம் மட்டும் தான் இருந்தது.

ஆனால் இப்போது ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே கிடையாது. சரி அதை விடுங்க. இது நமக்கு தெரிந்த விஷயம் தான். சரி உங்கள் போனில் பேட்டரி வேகமாகவே குறைந்து விடுகிறதா..? அப்படி என்றால் இந்த பதிவில் கூறும் Settings உடனே மாற்றிவிடுங்கள். இனி Battery குறையவே குறையாது. வாங்க நண்பர்களே அது என்ன Settings என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Solve Battery Drain Problem in Tamil: 

ஸ்டேப் – 1 

Developer Option

முதலில் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Developer Option என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் போனில் Developer Option இல்லையென்றால், அதை எப்படி கொண்டு வருவது என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்    👉 எந்தவொரு ஆப்பும் ஏற்றாமல் Developer Option கொண்டு வருவது எப்படி

ஸ்டேப் – 2 

அடுத்து Developer Option என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். அதில் பல ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால், அங்கு Apps என்பதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டேப் – 3 

Background Process Limit

பின் அங்கு Background Process Limit என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

நீங்கள் Data பயன்படுத்தி விட்டீர்கள் என்பது Notification வர இப்படி செய்யுங்க

ஸ்டேப் – 4 

No Background Process

அடுத்து ஒரு புதிய திரை தோன்றும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் No Background Process என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்து கொள்ளுங்கள்.

 இதுபோல No Background Process என்ற ஆப்ஷனை ON செய்வதால், உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் Background இல் தானாக Run ஆகிக்கொண்டிருக்கும் ஆப்ஸ் எதுவும் இனி Run ஆகாது. அதனால் இந்த ஆப்ஷனை ON செய்து கொள்ளுங்கள்.  

வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement