உங்க போன் Chrome ஆப்பில் இருந்து வரும் Pop – Up Ads -ஐ நிறுத்துவதற்கு இப்படி செய்யுங்க..!

Google Chrome Pop Up Notifications Stop In Tamil

Google Chrome Pop Up Notifications

அந்த கால கட்டத்தை விட இந்த காலகட்டம் எவ்வளவோ மாறி விட்டது என்றே சொல்லலாம். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் ஸ்மார்ட் போன் காலகட்டத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம். நாம் போனை பயன்படுத்திய காலம் மாறி போன் நம்மை பயன்படுத்துகிறது.

ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்ட போதெல்லாம் ஒரு சில வசதியானவர்கள் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். சரி இது நமக்கு தெரிந்த ஓன்று தான். வாங்க நண்பர்களே இது என்ன பதிவு என்று தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Google Chrome Pop Up Notifications Stop In Tamil:

Pop Up Notifications

நம் அனைவரின் போனிலும் Google Chrome ஆப் கட்டாயம் இருக்கும். அதில் சில சமயங்களில் சம்மந்தமே இல்லாமல் மேலே படத்தில் உள்ளது போன்று சில Notifications வரும். பொதுவாக நீங்கள் ஏதாவது ஒரு Website ஓபன் செய்து பார்க்கிறீர்கள் என்றால் அதை தெரியாமல் Allow கொடுத்துவிட்டால் உங்களுக்கு அதில் இருந்து சில Notifications வரும். அதை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் குழம்புவீர்கள். அந்த வகையில் இன்று இந்த பதிவின் வாயிலாக அந்த Pop Up Notifications -யை நிறுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!

ஸ்டேப் -1 

முதலில் உங்கள் போனில் இருக்கும் Google Chrome ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

ஸ்டேப் -2 

Site Settings

பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின் அதில் உள்ளே சென்று கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Site Settings என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

Notification

அதில் Notification என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

 

Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

ஸ்டேப் -4

Allow

பின் அதில் Allow என்ற ஆப்சன் இருக்கும். அதில் நீங்கள் எந்த Website -ற்கு எல்லாம் Allow கொடுத்து இருக்கிறீர்களோ அந்த Website எல்லாம் அங்கு இருக்கும்.

ஸ்டேப் -5

Pop On Screen

அதில் ஏதாவது ஒரு Website -யை கிளிக் செய்தால் ஒரு புதிய திரை தோன்றும். அதில் Pop On Screen என்ற ஆப்சன் இருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இதுபோல OFF செய்வதால் இனி அந்த Website -ல் இருந்து மெசேஜ் வராது. அதுபோல அந்த Website வேண்டாம் என்றாலும் அதை நீங்கள் Block என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டெலேட்ச்செய்து கொள்ளலாம்.  
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்