போன் மெமரியில் வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் தானாக நிரம்புவது நிறுத்துவது எப்படி?

Advertisement

How to Stop Whatsapp From Downloading Pictures and Save Videos in Phone Memory in Tamil..!

whatsapp tricks in tamil:- வாட்ஸ்அப் செயலி அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத செயலியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், மக்கள் whatsapp செயலியையே விரும்பி பயன்படுத்துகின்றனர். உலகளவில் இந்த whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் மெசேஜ் அனுப்புவது மட்டுமல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நமக்கு தெரியும்.

இந்த வாட்ஸ்அப் வழியாக நீங்கள் பெறும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருக்கும். இதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதனை தடுக்க சில வழிமுறைகள் உள்ளது அதை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

போன் மெமரியில் வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் தானாக நிரம்புவது நிறுத்துவது எப்படி? whatsapp tricks in tamil..!

ஸ்டேப்: 1

whatsapp

முதலில் தங்களுடைய வாட்ஸ்அப் செயலியை திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 2

whatsapp

அடுத்து Data Storage and Usage (டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் யூசேஜ்) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

பின்னர் நீங்கள் Media Auto-download விருப்பத்தை காண்பீர்கள், அதன் கீழ் 3 விருப்பங்களையும் காண்பீர்கள். இதில் நீங்கள் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது வீடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றைக் குறிப்பிடும் விருப்பங்களை காட்சிப்படுத்தும்.

ஸ்டேப்: 4

whatsapp

அதில் நீங்கள் When using mobile data என்கிற விருப்பத்தை தேர்வு செய்து எதெல்லாம் டவுன்லோட் ஆக வேண்டும், எதெல்லாம் ஆக கூடாது என்பதை தேர்வு செய்து ஓகே என்பதை கிளிக் செய்யவும்.

இதைச் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் உங்களது போன் ஸ்டோரேஜில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தானாக சேமிப்பதை நீங்கள் நிறுத்தலாம். மேலும் நீங்கள் விரும்பும் மீடியாக்களை மட்டுமே பதிவிறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement