English-யில் உள்ள YouTube வீடியோவை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது எப்படி தெரியுமா?

Advertisement

How to Translate YouTube Video Subtitles to Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவு அனைவருக்கும் பயன் உள்ள தகவலாக இருக்கும். அதாவது YouTube மூலம் பல வகையான வீடியோக்களை நாம் பார்க்கிறோம். நமக்கு புரியாத பிற மொழிகளிலும் வீடியோக்கள் பதிவு செய்ய படுகிறது. நாம் அனைத்து மொழிகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. சிலருக்கு தமிழ் மொழி மட்டும் தான் தெரியும் வேறு எந்த மொழியு தெரிந்திருக்காது. சிலருக்கு தமிழ் மொழியுடன், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் இது போன்று மொழிகளும் தெரிந்திருக்கும். நீங்கள் YouTube-யில் பார்க்கும் வீடியோ பிற மொழிகளில் இருக்கிறது அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லையே அன்று கவலைப்பட வேண்டாம். அதற்கும் YouTube-யில் ஒரு அருமையான வசதி இருக்கிறது, அதனை செய்தாலே போதும். சரி அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பிறமொழி YouTube-யில் வீடியோவை மொழிபெயர்ப்பது எப்படி?

இந்த வசதி பிற மொழிகளை விட ஆங்கில மொழிகளை மொழி பெயர்த்து நமக்கு திரையில் காட்டுகிறது. அதற்கு உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் எதாவது ஒன்றை On செய்து YouTube-ஐ Open செய்யுங்கள்.

இந்த வசதியை நாம் இந்த இரண்டில் மட்டும் தான் செய்ய முடியும் மொபைலில் செய்ய முடியாது. வேண்டுமென்றால் மொபைலில் உங்கள் Google Chrome-ஐ Open செய்து டெஸ்க்டொப் பதிப்பிற்கு (Desktop site) மாற வேண்டும். பிறகு Chrome-யில் YouTube Open செய்து பிற மொழிகளை மொழிபேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

ஸ்டேப்: 1

சரி எப்படியாவது இந்த மூன்று வழியில் எதாவது ஒன்றை Open செய்து கொள்ளுங்கள். பிறகு ஏதாவது ஒரு English வீடியோவை ஓபன் செய்யுங்கள்.

ஸ்டேப்: 2

வீடியோவை ஓபன் செய்தவுடன் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் Option கண்டிப்பாக இருக்கும். subtitles / CC- Closed Captions மற்றும் Settings ஆகும்.

ஸ்டேப்: 3

அவற்றில் Settings என்பதை கிளிக் செய்யுங்கள். அவற்றில் Subtitles/cc என்ற option காட்டப்படும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

பிறகு அவற்றில் Auto Translate என்பதை கிளிக் செய்யுங்கள். Auto Translate என்பதை கிளிக் செய்தவுடன் 35-ற்கு மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்து பார்க்கக் கூடிய வசதி யூடியூபில் இருக்கிறது. ஆக அந்த 35 மூன்று மொழிகளில் உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியை தேர்வு செய்தால் போதும்.

ஸ்டேப்: 5

இப்படி நீங்கள் விரும்பு மொழியை தேர்வு செய்யும் போதும். அதன் விட்டாயோ ஆங்கில வசனங்கள் இருந்து நீங்கள் செட் செய்த மொழி  உதாரணத்திற்கு தமிழ் மொழியை தேர்வு செய்திருந்தால் அந்த தமிழ் மொழியில் வசனங்கள் மொழிபெயர்த்து காட்டப்படும். வீடியோவின் கீழே காட்டப்படும் அதாவது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் காட்டப்படும்.

குறிப்பு: இந்த Option எல்லா YouTube வீடியோ பதிவுகளிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில வீடியோவிற்கு இருக்கும் சில வீடியோவிற்கு இருக்காது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement