New Broadcast in Whatsapp in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய தொழில்நுட்பம் பதிவில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அருமையான பதிவாக இருக்கும். மிஸ் பண்ணிடாமல் இதனை தொடர்ந்து பாருங்கள். வாட்ஸ் அப் ஆனது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்விக்கும் அளவில் புது புது அப்டேட்களை கொண்டு வந்தாலும், அதனை நாம் தெரிந்து கொள்ளாமலே இத்தனை நாள் உபயோகிக்கிறோம். ஆனால் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பதிவை பார்த்தால், நீங்களே ஆச்சிரியபடுவீர்கள். அப்படி என்னவா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? சரி வாருங்கள் நம் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.? |
What is Broadcast in Whatsapp in Tamil:
வாட்ஸ்அப்பில் இருக்கும் Broadcast என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் இதனை நாம் அதிகமாக பார்த்திருப்போம், ஆனால் இதனை தெரிந்துகொண்டிருக்க மாட்டோம். புரியும்படி சொல்லவேண்டும் என்றால், நீங்கள் பொதுவாக உங்களுடைய முக்கியமான நண்பர்களுக்கு, ஏதேனும் பதிவுகளை பகிரவேண்டும் என்று நினைப்பீர்கள், அப்பொழுது அதற்காக தனியாக Group ஓப்பன் செய்து அதில் பகிர்ந்து வருவீர்கள், அப்படி இல்லையென்றால் தனித்தனியாக அனுப்புவீர்கள் அல்லவா.
ஆனால் இந்த Broadcast ஆனது ஒரு Group உருவாக்குவதுதான். ஆனால் நாம் எப்பொழுதும் உருவாக்கும் குரூப்களில் யார்யார் இருக்கிறார்கள், யார் அட்மின் என்று கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த Broadcast மூலம் குரூப் உருவாக்கி, ஒரு 10 பேருக்கு நீங்கள் செய்திகளை பகிரும் பொழுது, அவர்களுக்கு தனித்தனியாகத்தான் செய்திகள் போய் சேரும். மேலும் அவற்றை எப்படி உருவாக்குவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
வாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..! |
How to Use Whatsapp New Broadcast in Tamil:
ஸ்டேப் : 1
முதலில் உங்களுடைய மொபைலை எடுத்துக்கொண்டு அதில் Whatsapp ஆப்பை Open செய்து கொள்ள வேண்டும். Whatsapp ஆப் ஓபன் செய்ததும் வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும், அதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் : 2
அடுத்ததாக அந்த மூன்று புள்ளிகளையும் கிளிக் செய்ததும் New Broadcast என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் : 3
New Broadcast டை கிளிக் செய்ததும் உங்களுடைய Whatsapp Contact லிஸ்ட்டில் உள்ளவர்கள் இருப்பார்கள். அதில் நீங்கள் விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து டிக் செய்யவும்.
ஸ்டேப் : 4
நீங்கள் தேர்வு செய்ததும், அது ஒரு குரூப்பாக மாறி விடும், ஆனால் அந்த குரூப் இருப்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும், மற்றவர்களுக்கு அது குரூப் என்று தெரியாது, நீங்கள் தனியாக msg செய்தது போல் தான் இருக்கும்.
இதனால் உங்களுக்கு என்ன பயன் என்றால், நீங்கள் எப்பொழுதும் உருவாக்கும் குரூப்களில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியும், இதனால் இவர்களுடைய தொலைபேசி எண்கள் மற்றவர்களுக்கு தெரிவது போல இருக்கும். ஆனால் நீங்கள் New Broadcast மூலம் குரூப் உருவாக்கி செய்திகளை பகிரும் பொழுது அதில் யார்யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாது. எனவே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் உருவாக்கி பாருங்கள்.
இனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |