இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது..? |How to Work Internet in Tamil
இன்றைய உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் இயங்காது. இன்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இன்டர்நெட் அனைவரும் பயன்படுத்தும் அடிப்படை தேவைகளில் ஒன்றாகி விட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தேவைக்காக இன்டர்நெட்டை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். அப்படி அனைவரின் தேவைகளில் ஒன்றான இன்டர்நெட் எவ்வாறு வேலை செய்கிறது.? ஒரு கம்ப்யூட்டரில் உள்ள தகவல், வீடியோ போன்றவை மற்றொரு கம்ப்யூட்டருக்கு எப்படி வருகிறது..? என்று பலபேர் யோசித்திருப்பீர்கள்.! அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இன்டர்நெட் என்றால் என்ன.? | What is Internet in Tamil:
இந்த இன்டர்நெட் ஆனது, நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கும், டேட்டாக்களை பரிமாறிக்கொள்வதற்கும் உதவுகிறது. இந்த இன்டர்நெட் ஆனது வயர்லெஸ் மற்றும் ஆப்டிகல் தொழில்நுட்பங்களால் இயக்கப்படுகிறது.
RAM -மிற்கும் ROM -மிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன..? |
நமக்கு தேவையான அனைத்து தகவல்களும் மிக வேகமாக கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் இன்டர்நெட் தான். வணிகம், தனியார், அரசாங்கம், பொதுக்கல்வி போன்ற பல வகையான நெட்வொர்க்குகள் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டிருக்கும்.
இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது.?
நீங்கள் கம்ப்யூட்டரில் பிரௌசருக்கு சென்று ஏதாவது ஒரு இணையதள முகவரியை டைப் செய்து என்டர் செய்கிறீர்கள். இப்படி நீங்கள் செய்யும் போது உங்களுக்கு தேவையான இணையதளம் வேண்டும் என்ற உங்களின் வேண்டுகோளை சர்வருக்கு அனுப்புகிறது.
அந்த சர்வர் ஆனது தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது. இந்த சர்வர் இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது. இதேபோல் மாறி மாறி சென்று கடைசியாக ஐ.எஸ்.பி என்னும் சர்வர் மூலம் “ஹை ஸ்பீடு நெட்வொர்க்” என்னும் அதிவேகமான வழியில் சென்று நீங்கள் டைப் செய்த இணையதள முகவரி இருக்கும் தளத்திற்கு செல்கிறது.உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..? |
பிறகு அந்த சர்வர் தனது தளத்தில் உள்ள, நீங்கள் கேட்ட தகவலை பாக்கெட் பாக்கெட்டாக, உங்கள் வேண்டுகோள் வந்த பாதையிலே ஐ.எஸ்.பி நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.
நீங்கள் இணைத்திருக்கும் அந்த நிறுவன சர்வர் அந்த தகவலை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வாறு தான் இன்டர்நெட் நமக்கு தேவையான தகவலை தருகிறது. ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள விஷயங்களும் இருக்கின்றன.
நீங்கள் ஒரு இணையதளத்தின் முகவரியை சொற்கலில் தான் டைப் செய்து அனுப்புகிறீர்கள். ஆனால் கம்ப்யூட்டர் ஆனது அதற்கு புரிந்த மொழியில் மாற்றி கொள்ளும். இதற்கு ப்ரோடோகால் உதவுகிறது.
இந்த ப்ரோடோகால் ஆனது, இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே தகவலை பரிமாறிக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த ப்ரோடோகால்கள் பலவகைகளில் இருக்கிறது. ஆனால் அதிகமாக பயன்படுவது IP, TCP ப்ரோடோகால்கள் தான்.இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு IP அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இது 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும்.இது இதனுடைய நிலையான எண் ஆகும்.
உங்களின் கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணையும் போது உங்களின் ஐ.எஸ்.பி ஆனது உங்களுக்கென ஒரு முகவரி எண்களை ஒதுக்கும். ஆனால் இது நிரந்தரமானது இல்லை நீங்கள் இன்டர்நெட்டில் இருக்கும் வரை அது உங்களுக்கு சொந்தமாகும்.
5G தொழிநுட்பம் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சிறப்புகள்..! |
நீங்கள் இன்டர்நெட்டில் இருந்து மீண்டும் செல்கையில் மற்றொரு எண் வழங்கப்படும். இதற்கு காரணம் நூற்றூக்கணக்கான கம்ப்யூட்டர்களை ஒரே நேரத்தில் ஐ.எஸ்.பி இன்டர்நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் எண்கள் கொடுக்கப்படுகிறது.
இந்த எண்களின் கோவையும் நான்கு இலக்கத்தால் ஆன தொடராக இருக்கும். ஒவ்வொரு எண்களும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த எண்களிலான முகவரி முக்கியமானதாகும்.
இந்த எண்களின் மூலமாகத்தான், எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது, எந்த கம்ப்யூட்டர் வேண்டுக்கோள் வைத்துள்ளது என்று தெரிய வரும்.
TCP ப்ரோடோகால் தகவல்களை பிரித்து பாக்கெட் பாக்கெட்டாக அது சேர வேண்டிய இடத்திற்கு ஒழுங்காக தருகிறது. IP அட்ரஸ் எங்கிருந்து எங்கு தகவல் போக வேண்டும் என்பதை தீர்மனிக்கிறது.
எனவே TCP, IP ப்ரோடோகால்கள் இணைந்து தான் தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |