இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு Update ஆ..? இனி சூப்பரா விளையாடலாம்..!

Advertisement

Instagram New Update Game in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இன்றைய நிலையில் நம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் என்று அனைவருக்குமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியும். அதிலும் குழந்தைகளை பற்றி சொல்லவே வேண்டாம். குழந்தைகள் ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். அப்படி ஸ்மார்ட் போனில் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.

அவ்வளவு ஏன் ஸ்மார்ட் போன் வந்ததற்கு பின் தான் உள்ளங்கையில் உலகமே உள்ளது. உலகின் மூலைமுடுக்கில் உள்ள தகவல்களை கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் ஸ்மார்ட் போன் என்றால் வாட்ஸ்அப் தான் நியாபகத்திற்கு வரும். இப்போது ஸ்மார்ட் போன் என்றால் இன்ஸ்டாகிராம் தான் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் என்றால் என்னவென்று குழந்தைகளை கேட்டால் கூட தெரியும். அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராம் Famous ஆக இருக்கிறது. சரி இப்போது, இன்ஸ்டாகிராமில் புதிதாக ஒரு அப்டேட் வந்திருக்கிறது. அது என்ன அப்டேட், அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மகளிர் தினத்தையொட்டி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.. எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா..

Instagram Game Update in Tamil: 

நாம் அனைவருமே காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை இன்ஸ்டாகிராமில் தான் இருக்கின்றோம். அப்படி இருந்தும் நமக்கு ஒரு நாளும் போர் அடித்ததே இல்லை. அதிலும் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு Game கொண்டு வந்திருக்கிறார்கள். இனி சொல்லவே வேண்டாம். இனி அனைவரும் இன்ஸ்டாகிராமில் தீயா வேலை செய்வார்கள். சரி வாங்க நண்பர்களே அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

ஸ்டேப் -1:

முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் உள்ளே செல்லுங்கள். பின் அதில் மேல் Messenger ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

Google Messages நோட்டிஃபிகேஷன்களை சைலன்ட்டில் போடுவது எப்படி

ஸ்டேப் -2:

அடுத்து ஒரு புதிய திரை தோன்றும். அதில் நீங்கள் Chat செய்யும் உங்கள் நண்பர்களின் Id இருக்கும். அதில் சென்று நீங்கள் உங்கள் நண்பனுக்கு ஏதாவது இமோஜியை அனுப்பலாம்.

ஸ்டேப் -3:

அப்படி அனுப்பியதும், நீங்கள் அனுப்பிய இமோஜியின் மேல் கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் நீங்கள் அனுப்பிய இமோஜியை வைத்து ஒரு Game வரும். அதை நீங்கள் விளையாடலாம். ஒரு வேலை நீங்கள் அவுட் ஆகிவிட்டால், Play Again என்பதை கிளிக் செய்து மீண்டும் விளையாடலாம்.

சரி அப்றம் என்ன நண்பர்களே..! உடனே இன்ஸ்டாகிராம் சென்று தீயா விளையாடுங்கள்.

உங்கள் Smart Phone -ல் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement