jio giga fiber பிரிவியூ சலுகை என்ன தெரியுமா?

Advertisement

அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஜியோ நிறுவனம் தற்போது இந்திய தொலைபேசி சந்தையில் முதல் இடத்தில் உள்ளது என்று.

அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் புதிய புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது.

இருந்தாலும் அதிகமாக வாடிக்கையாளர்களை கவர பலவகையான சிறப்பு சலுகைகளை வழங்கி கொண்டுவருகிறது.

jio giga fiber  என்று தற்போது இணையதள சேவைக்காக புதிய நிறுவனம் துவங்கியுள்ளது.

மேலும் இதற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஜியோ ஜிகா பைபருக்கு முதல் கட்டமாக சலுகையை அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

jioமுன்பதிவுகள்:

jio giga fiber முன்பதிவுகள் தொடங்கப்பட்டு, முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஜியோ நிறுவனம் இந்நிலையில் ஜியோ ஜிகா பைபர் பிரிவியூ சலுகைக்கு, முதல் மூன்று மதத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.

வாடிக்கையாளர்கள் ரூ.4500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதத்திற்கு எந்த வித கட்டணம் இல்லாமல் கூடுதல் சலுகைகளை பெற இயலும்.

6 மாத சலுகைக்கு எதிர்ப்பார்ப்புகள்:

6 மாத சலுகையை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஒன்றும் வெளிவரவில்லை.

பெரும் நகரங்களுக்கு முதலில் சேவைகள் துவங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவுக்கு வழங்கப்பட்ட 6 மாத சலுகையையை போல ஜியோ பைபர் சலுகையில் இலவச பிரிவியூ வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

40 ஜிபி டேட்டா:

நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டாப்-அப் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப்- சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

1100 ஜிபி டேட்டா:

முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும். இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெறமுடியும் என்று பிரிவியூ சார்ந்த விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement