அப்டேட்டூனா இப்படி தாங்க இருக்கனும்..! வேறு எதுல நம்ம வாட்சப்ல தான்..!

Latest Whatsapp Update Features 2023 

நாம் அனைவரும் ஒரு நாளைக்கு என்ன வேலை பார்க்கிறோமே இல்லையோ கண்டிப்பாக வாட்சப்பில் தான் குறைந்தபட்சமாக 4 முதல் 5 மணி நேரம் வரை இருக்கிறோம். நம் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நம்மிடம் கேட்பார்கள் அந்த மொபலில் அப்படி என்ன தான் இருக்கிறது எந்நேரமும் இதையே பார்த்து கொண்டே இருக்கிறாய் என்று திட்டுவார்கள். ஆனால் நாம் இப்படி திட்டுவாங்குவதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் வாட்ஸப்பில் Chat செய்து கொண்டிருப்போம். இத்தகைய செயல் ஆனது ஒன்று, இரண்டு வீடுகளில் மட்டுமே நடப்பது அல்ல. அனைத்து வீடுகளிலும் இத்தகைய செயல் தான் நடக்கிறது. இப்படி பயனாளர்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க வாட்ஸப்பின் தேவையும், அப்டேட்டும் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டுமே எண்ணிலடங்காத அப்டேட்டுகள் வந்து விட்டது. அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு அப்டேட்டும் வந்து உள்ளது. அது என்ன அப்டேட் எதற்கு பயன்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்ஸ்அப் அப்டேட்:

Update- 1

வாட்ஸ்அப் அப்டேட்

நம்முடைய நண்பர்களுடன் ஒன்றாக சேர்த்து வெளி ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அனைவரிடமும் யார் யார் வருகிறார்கள் என்று கேட்க வேண்டும். அதன் பிறகு எந்த ஊரு செல்லப்போகிறோம் என்று கேட்பதற்கும் தனியாக பதில் கூற வேண்டும்.

ஆனால் இது மாதிரி நீங்கள் செய்ய வேண்டாம். அதற்கு முதலில் உங்களுடைய வாட்ஸப்பினை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் உள்ள பின் போன்ற அமைப்பினை கிளிக் செய்து கொண்டு அடுத்து அதில் காணப்படும் Poll என்ற Option-ஐ  செய்து கொள்ள வேண்டும்.

இப்போது அதில் நீங்கள் எந்த ஊருக்கு செல்ல போகிறீர்கள் யாரெல்லாம் வருகிறார்கள் என்று உங்களுக்கு ஏற்ற மாதிரியான அமைப்பினை அமைத்து கொள்ளலாம்.

உங்க போன் உள்ள Google Chrome ஆப்பில் இதெல்லாம் Off-ல இருக்கானு கொஞ்சம் Check பண்ணிக்கோங்க 

Update- 2

whatsapp update 2023

நாம் சில குரூப்பில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இதர விஷயங்கள் என நிறையவற்றைக்கு குரூப் தனித்தனியாக இருக்கும். குரூப்பை பொறுத்தவரை 10 அல்லது 20 நபர்கள் இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை.

அதுவே ஒவ்வொரு குருப்பீலும் 250 அல்லது 256 நபர்களுக்கு மேல் இருந்தால் நிறைய Notification வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு Notification வந்தால் மொபைலில் ஹேங் ஆகக்கூடிய நிலைமை ஏற்படும்.

அதனால் 256 நபர்கள் இருகக்கூடிய எந்த குரூப் ஆகா இருந்தாலும் தானாகவே Notification Off ஆகிவிடும். இத்தகைய அப்டெட்டின் மூலம் மொபைல் ஹேங் ஆகுவதையும் தவிர்க்கலாம்.

அட WhatsApp-ல் இந்த மூன்று Update-ம் செம சூப்பர் 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil