ரூ.13,990-விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.! (LED Tv Reviews)

Advertisement

ரூ.13,990-விலையில் களமிறங்கிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.! (LED Tv Reviews)

சியோமி, எல்ஜி நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, இந்நிறுவனங்களின் டிவி மாடல்கள் அனைத்தும் சற்று விலை உயர்வாக தான் இருக்கிறது.

ஆனால் மலிவு விலை மற்றும் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது ட்ரூவிஷன் நிறுவனம்.

குறிப்பாக சியோமி, எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டியாக தான் ட்ரூவிஷன் நிறுவனம் மலிவு விலையில் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ட்ரூவிஷன் நிறுவனம்.

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு..! மக்களே உஷார்..!

சரி வாங்க ட்ரூவிஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள  tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

வடிவமைப்பு (LED Tv Reviews):

32-இன்ச் ட்ரூவிஷன் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பற்றி பேசுகையில், விஜிஏ-அவுட்புட், 2யுஎஸ்பி போர்ட், ஆடியோ-வீடியோ அவுட்புட், 2எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது.

மேலும் செல்போன் மற்றும் கீபோர்ட் சாதனங்களை கூட இந்த ஸ்மார்ட் டிவியுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

மென்பொருள் (LED Tv Reviews):

புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடலின் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள வீடியோ செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

பின்பு எப்போதும் போல் சாதரண ரீமோட் மட்டுமே இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைஅனுபவம் (LED Tv Reviews):

ட்ரூவிஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி சிறந்த கலர் அம்சம் மற்றும் திரை அனுபவம் கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது, ஆனால் சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள பேக்லைட் அம்சம் மற்றும் சில அம்சங்கள் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் இல்லை.

இருந்த போதிலும் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவியாக tw3262 (LED Tv Reviews) ஸ்மார்ட் டிவி உள்ளது.

விலை (LED Tv Reviews):

ட்ரூவிஷன் நிறுவனத்தின் tw3262 (LED Tv Reviews) ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,990-ஆக உள்ளது.

மேலும் எல்ஜி, சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களை விட குறைவாக தான் இருக்கிறது.

Tv & Fridgeக்கு இனி இதை Try பண்ணுங்க..!
இதுபோன்ற தொழிநுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> தொழிநுட்ப தகவல்கள் 
Advertisement