LG நிறுவனம் உலகின் முதன்முதலாக 8K டிவி அறிமுகம் செய்துள்ளது..!

Advertisement

LG நிறுவனம் உலகின் முதன்முதலாக 8K டிவி அறிமுகம் செய்துள்ளது..!

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

எல்.ஜி நிறுவனம் உலகிலேயே முதன்முதலாக 8K பிக்சல் OLED டிவியை அறிமுகம் செய்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் தற்போது அதிகபட்சமாக 4K பிக்சல் டிவி தான் சந்தையில் உள்ளது. இதன் விலை 40 ஆயிரம் ரூபாயாகும்.

இந்த நிலையில், தற்போது உலகிலேயே முதன் முறையாக எல்.ஜி நிறுவனம் 8K பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய டிவியை தயாரித்துள்ளது.

அடுத்த வாரம் இது தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 3வது காலாண்டில் வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகிறது.

லெனவோ நிறுவனம் உலகிலேயே முதன் முதலாக 5G Laptop அறிமுகம் செய்ய உள்ளது..!

சிறப்பு அம்சங்கள்:

தொழில்நுட்ப செய்திகள்:

இதில் 88இன்ச் OLED பெரிய திரை, 8K (7680 x 4320) பிக்சல் கொண்ட அல்ட்ரா HD டிஸ்ப்ளே உள்ளது. இது தற்போது உள்ள 4K டிவியை விட இருமடங்கு பெரியதாகும். இதற்காக பிரத்யேகமாக ஆல்பா 9 பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய 5.1 விர்ச்சுவல் சவுண்ட் சப்போர்ட் உள்ளது. இது தவிர கூகுள் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்ஸா போன்ற வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

முன்னதாக 4K டிவி அறிமுகமான போது, அதற்கு ஏற்றாற்போல், 4K வீடியோக்கள் பரவலாக இல்லை. தற்போது வரைக்கும் கூட, 4K பிக்சலில் ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் மட்டும் தான் ஒளிபரப்பு சேவை கொண்டுள்ளது.

திரைப்படங்கள் கூட அரிதான வகையில் தான் 4K கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், 8K டிவி என்பது சந்தையில் சாதனை புரியுமா என்பது கேள்விகுறி தான்.

ஆனால், 2020 ஒலிம்பிக் போட்டியானது 8K கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மேலை நாடுகளில் இதற்கு பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

எல்.ஜி 8K டிவியின் விலை குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், குறைந்தது 1 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் தென்கொரியாவில் 8K டிவிக்காக முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி பாருங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement