சுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டிவியா..!

தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள் – எல்ஜி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக மடிக்கும் டிவியா..!

2019 ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவையொட்டி, எல்.ஜி.நிறுவனம் சுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி யை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில், வாடிக்கையாளர் தொழிற்நுட்ப சங்கம் சி.இ.எஸ் நடத்திய விழா ஒன்றில் எல்.ஜி. நிறுவனம், மடிக்கும் தொலைகாட்சி (lg rollable tv) ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக அறிவித்தது.

ஓர் ஆண்டு கழித்து, வரும் ஜனவரி மாதத்தில் லாஸ் வேகஸில் சி.இ.எஸ் தனது அடுத்த விழாவை நடத்த உள்ளது.

யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

 

புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் இக்கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டு பிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்துவர்.

அந்த வகையில், சென்ற ஆண்டு எல்.ஜி நிறுவனம் தெரிவித்திருந்தது போல தனது புதிய மடிக்கும் தொலைகாட்சியை இந்த ஆண்டு விழாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பலரால் நம்பப்படுகிறது.

இதற்கான ஒரு துணுக்காக சென்ற ஆண்டு நடந்த சி.இ.எஸ் விழாவில், மறைத்துவைக்கப்பட்டிருந்த ப்ரோடோடைப் ஒன்றை எல்.ஜி. நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த (lg rollable tv) தொலைக்காட்சிகளை சுருட்டி வைத்துவிட்டு, வேண்டும் என்ற போது விரித்து வைத்து பயண்படுத்திக்கொள்ளலாம். மேலும் இவை ஒரு சிறிய பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையில் இருக்கலாம் என்பதால் எங்கு வசதிப்படுகிறதோ அங்கு அதை விரித்து வைத்து உபயோகப்படுத்திக்கெள்ளலாம் என்று கருதப்படுகிறது.

தொழில்நுட்ப செய்திகள் – குழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் !!!

 

ஓ.எல்.இ.டி தொழிற்நுட்பம் கொண்ட தொலைக்காட்சிகள் தற்போது மிக மெல்லிய தோற்றம் கொண்ட தொலைக்காட்சிகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தொலைக்காட்சிகள் தயாரிக்கும் அத்தியாயத்தில், எல்.ஜி. நிறுவனம் ஒரு படி மேலே உயர்ந்து இந்த மடிக்கும் தொலைக்காட்சிகளை (lg rollable tv) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், தங்கள் வீடுகளில் மிகப்பெரிய அளவிலான தொலைக்காட்சிகளை வைத்திருக்கும் நபர்கள், பயன்படுத்தப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாக அவற்றை பார்க்கிறனர்.

தொழில்நுட்ப செய்திகள் – ஜியோவின் புதிய திட்டம்..! ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..!

இப்படியான சிந்தனை உள்ளவர்களை குறிவைத்தும், எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து டி.வி பார்க்கும் ஆசை உள்ளவர்களை குறிவைத்துமே இந்த வகை தொலைக்கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்தாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News