Mobile Charging Tips in Tamil
ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் சார்ஜ்ர் போட்டா இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நாளடைவில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை சார்ஜ் போட்டு பயன்படுத்துகின்ற மாதிரி ஆகிவிடும். இன்னும் சில போன்கள் சார்ஜர் போட்ட கொஞ்ச நேரத்திலே சார்ஜர் குறைந்து விடும். இதற்கு என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Mobile Phone Battery Care Tips in Tamil:
Wifi Location On in Tamil:
முதலில் உங்கள் போனில் WIFI, Location, Bluetooth, போன்றவை எப்பொழுதும் ON -ல் இருந்தால் சார்ஜர் சீக்கிரமாக குறைந்து விடும். அதனால் இதெல்லாம் OFF செய்து வைத்திடுங்கள். தேவையான நேரம் மட்டும் ஆனில் வைத்திருக்கவும்.
Keyboard Vibrate Off in Tamil:
இரண்டாவதாக மொபைல் Keyboard-ல் டைப் செய்யும் போது Vibrate ஆகும். இந்த Vibrate ஆனாலும் சார்ஜர் குறையும். அதனால் இதை ஆப் செய்து விடவும். அதற்கு Settigns என்ற ஆப்ஷனுக்கு சென்று Vibrate என்பதை கிளிக் செய்து Touch Vibration என்பதை OFF செய்து வைக்க வேண்டும்.
Full Night Charging is Good or Bad in Tamil:
இரவு முழுவதும் சார்ஜ் போடலாமா என்றால் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. இரவு முழுவதும் சார்ஜ் போடும் போது பேட்டரியும் ஹீட் ஆகும், சார்ஜரும் ஹீட் ஆகிவிடும். இதனால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து விடும். இந்த தவறையும் செய்து விடாதீர்கள்.
இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க
100 Charging is Good or Bad in Tamil:
100 % சார்ஜ் ஏற்ற கூடாது. அது போல 0% வர வரைக்கும் பயன்படுத்திவிட்டு சார்ஜ் போட கூடாது. 15 % சார்ஜ் இருக்கும் போதே சார்ஜ் போட வேண்டும். 90% சார்ஜ் ஏறியதும் ஆப் செய்ய வேண்டும்.
Charger Type in Tamil:
அடுத்து முக்கியமாக உங்க போனின் சார்ஜரை தான் பயன்படுத்த வேண்டும். மற்ற போனின் சார்ஜரை பயன்படுத்த கூடாது.
Unwanted Apps Remove in Tamil:
உங்க போனில் பயன்படுத்துகின்ற ஆப்பை மட்டும் வைத்திடுங்கள். தேவையில்லாத ஆப்பை Uninstall செய்யவும். தேவையில்லாத ஆப்கள் Bakground -யில் ரன் ஆகிக்கொண்டிருக்கும். இதனால் சார்ஜர் சீக்கிரமாக குறைந்து விடும்.
பேட்டரியின் ஆயுளை அதிகரிப்பதற்காக Battery Saver என்று பல ஆப்களை வைத்திருப்பீர்கள். அதெல்லாம் Uninstall செய்து விடவும். அடுத்து Anti Virus போன்றவை பயன்படுத்தாதீர்கள்.
Remove Live Wallpaper in Tamil:
Live Wallpaper, Widgets போன்றவை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், இவை பயன்படுத்தும் போது சார்ஜர் குறைந்து விடும்.
Software Update Mobile in Tamil:
மொபைல் பயன்படுத்தி கொண்டிருக்கும் போது Software Update என்று வரும். அப்படி வரும் போது அப்டேட் கொடுங்கள். பேட்டரியில் ஏதவாது பிரச்சனை என்றால் அந்த அப்டேட்டினால் சரி செய்துவிட முடியும்.
Switch Off Your Phone in Tamil:
உங்க போன் Switch off ஆனது எப்போது என்று தெரியுமா.? யோசிக்கிறீர்களா.! நாள் முழுவதும் பயன்படுத்துகிறோம் அதற்கு எப்போதாவது ரெஸ்ட் கொடுத்துருப்போமா.! நீங்கள் எப்படி நாள் முழுவதும் உழைத்துவிட்டு இரவில் எப்படி ரெஸ்ட் தேவைப்படுகிறதோ, அது போல் மொபைலுக்கும் ரெஸ்ட் தேவைப்படும். அதனால் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு 1 மணி நேரம் Switch off செய்து வைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்களது போனில் இதெல்லாம் On- ல் வைத்திருந்தால் சார்ஜர் சீக்கிரமாக குறைந்து விடும்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |