Mobile Hang Problem Solution
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்சனை தான் இது. போன் புதியதாக வாங்கிய சில நாட்கள் வேகமாக செயல்படும். கொஞ்சம் நாளாக நாளாக போன் Hang ஆக ஆரம்பிக்கும். இதனால் நம்மால் ஒரு ஆப்பை கூட ஒழுங்காக பயன்படுத்த முடியாது. போன் Hang ஆகிறது என்று நாம் போனை கடையில் கொடுத்து அதிக காசுகளை செலவழிப்போம். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. நீங்களே போன் Hang ஆவதை சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mobile Hang Problem Solution -1
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே Developer Option என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் Memory என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அதில் மேலே Hours என்று 4 ஆப்சன் என்று கொடுக்கப்பட்டிருக்கும். அது எதற்காக என்றால், 3 Hours -ல் உங்களுடைய போனில் எவ்வளவு Memory Save ஆகி இருக்கிறது என்பதை காண்பிக்கும். அதுபோல அதில் இருக்கும் Hours -ஐ கிளிக் செய்து எவ்வளவு Memory சேவ் ஆகியிருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டேப் -4
அதுபோல அதன் கீழே Memory Used By Apps என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டேப் -5
அதில் உங்கள் போனில் இருக்கும் ஆப்கள் எல்லாம் எவ்வளவு Memory -யை Save செய்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு காட்டும். அதில் எந்த ஆப் Memory -யை Save செய்ய வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆப்பை நீங்கள் OFF செய்து கொள்ளலாம்.உங்கள் போன் அதிகமா சூடாகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..! |
Mobile Hang Problem Solution -2
ஸ்டேப் -1
அதேபோல Settings -ல் Developer Option என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே Running Services என்ற ஆப்சன் இருக்கும்.
ஸ்டேப் -2
அதில் உங்கள் போனில் இருக்கும் ஆப்கள் எல்லாம் அங்கு இருக்கும். அதில் உங்களுக்கே தெரியாமல் இந்த ஆப் Service எல்லாம் Running ஆகி கொண்டிருக்கும்.
ஸ்டேப் -3
உதாரணத்திற்கு, Bluetooth Services உங்களுக்கே தெரியாமல் Running ஆகி கொண்டிருக்கும். அந்த Services Running ஆக வேண்டாம் என்றால் அதை நீங்கள் OFF செய்து கொள்ளலாம்.
ஸ்டேப் -4
அதற்கு எந்த ஆப் Running ஆக வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆப் மேல் கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். அதில் Stop என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து OFF செய்து கொள்ளலாம்.இதுபோல செய்வதால் உங்கள் போன் Heat ஆவது மற்றும் Hang ஆவதை தடுக்க முடியும். இந்த 2 Settings -யையும் நீங்கள் OFF செய்தால் உங்கள் போன் இனி Hang ஆகாது.
உங்களது போனை ஹேக் செய்திருக்கிறார்கள் என்பதை இதை வைத்து கண்டு பிடித்துவிடலாம்..! |
மொபைல் போன் நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |