உங்க போன் ஹேங் ஆகுதா..! இனிமேல் இதை செய்யுங்க..! ஹேங் ஆகாது ஸ்பீடு அப்படி இருக்கும்

mobile hanging problem solution in tamil

போன் ஹேங் ஆகுவதற்கு காரணம் 

வணக்கம் நண்பர்களே..! அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை போன் ஹேங் ஆகுவது. இன்னொன்று போன் பாஸ்டா இருக்காது. இதற்கு என்ன காரணம் மற்றும் சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். போன் ஹேங் ஆகும் போது அப்படி ஒரு கோவம் வரும். போனை தூக்கி போட்டு உடைத்து விடலாமா என்ற அளவிற்கு கோவம் வரும். போனை ஒரு நிமிடமாவது பயன்படுத்தாமல் இருக்கிறோமா. காலையில் எழுந்ததிலுருந்து இரவு தூங்கும் வரை போனுக்கு ஓய்வே இல்லை. அதற்கு வாய் இருந்தால் பாவம் அழுதுவிடும்😁. அழுக முடியாமல் தான் போன் ஹேங் ஆகிறது. இதற்கு என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

தேவையற்ற ஆப்:

உங்களது போனில் எண்ணற்ற ஆப்பை வைத்திருப்பீர்கள். அதில் நீங்கள் பயன்படுத்தாத ஆப் இருந்தால் Delete செய்யுங்கள். Dress order, Food order, Photo editing என்று பல ஆப்களை வைத்திருப்பீர்கள். இதனால் போனின் ஸ்பீடு கம்மியாக இருக்கும். போனின் ஸ்பீடு அதிகரிக்க Settings-க்கு செல்லவும். அதில் Apps & Programmes என்பதை கிளிக் செய்யவும். அதில் தேவையில்லாத செயலியை Disable செய்து Conform செய்யவும்.

Cache Clear in Tamil:

போனில் ஹேங் ஆகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதுதான். இதனை நீங்கள் செய்தலே உங்கள் போன் ஸ்பீடு ஆக இருக்கும். ரொம்ப காலங்களாக போனில் சேமித்து வரும் போட்டோ வீடியோ இன்னும் பல விஷயங்கள் அதிகமாக இருந்தால் போன் ஹேங் ஆகும். இதனை சரி செய்ய போனில் Settings -க்கு செல்லவும். அதில் storage என்பதை கிளிக் செய்யவும். பின் Clear The Cache கிளிக் செய்யவும். இதை செய்தவுடன் உங்கள் போன் பாஸ்டா Work ஆகும்.

போன் அப்டேட்:

போனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியமானது. நீங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால் போன் ஹேங் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உங்களுது போனில் Settings சென்று About phone அல்லது System updates கிளிக் செய்து Update செய்யவும்.

குறைந்த விலை போன்:

நீங்கள் பயன்படுத்தும் பழைய மாடல்களில் உள்ள போன்கள் மற்றும் குறைந்த விலை போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஆப்களில் பெரிய ஆப்களை பயன்படுத்த கூடாது. பெரிய ஆப்கள் என்றால் Storage அதிகமாக உள்ள ஆப்களை வைத்திருக்கும் போது போன் ஹேங் ஆகும். இதனால் Facebook lite, Instagram lite போன்ற லைட் ஆப்களை பயன்படுத்தவும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News