Mobile Phone Charge Tips
ஆரம்ப காலத்தில் எல்லாம் மொபைல் போன் ஆனது ஒரு தெருவிற்கு ஒரு வீட்டில் இருப்பது என்பதே மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த டெக்னலாஜி காலத்தில் ஒரு வீட்டில் உள்ள அனைவரிடமும் மொபைல் இல்லை என்று கூறினால் தான் ஆச்சரியம். ஏனென்றால் 5 வயது குழந்தை முதல் 50 வயது வரை உள்ள பெரியவர்கள் என அனைவரிடமும் மொபைல் உள்ளது. மொபைல் வைத்து இருப்பது என்பது முக்கியமான ஒன்று கிடையது. அத்தகைய மொபைலை நல்ல முறையில் பராமரித்தால் மட்டுமே நீண்ட நாட்களுக்கு உழைக்கும் மற்றும் நமக்கு எந்த விதமான பாதிப்பும் வராது. ஆகையால் இன்று மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகிய சார்ஜ் ஏறும் போது மொபைலில் கவனிக்க வேண்டியவையும் மற்றும் அலட்சிய படுத்தக்கூடாதவைக்குமான டிப்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மொபைல் சார்ஜ் ஏறும்போது கவனிக்க வேண்டியவை:
நாம் பயன்படுத்தும் மொபைல் ஆனது சுவிட்ச் ஆப் ஆகாமல் இருந்தால் மட்டுமே நம்மால் உபயோகப்படுத்த முடியும். அவ்வாறு சுவிட்ச் ஆப் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் மொபைலுக்கு சார்ஜ் செய்வது என்பது முக்கியமான ஒன்று.
அவ்வாறு நாம் சார்ஜ் செய்யும் போது ஏற்படும் சின்ன சின்ன தவறுகள் கூட மொபைல் பேட்டரி வெடிப்பதற்கு காரணமாக அமைந்து விடும். ஆகையால் இப்போது மொபைல் பேட்டரி வெடிக்காமல் இருப்பதற்கான டிப்ஸ் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்க மொபைல் ரொம்ப Hang ஆகுதா.. அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க
டிப்ஸ்- 1
உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறும் போது திடீரென்று சத்தம் கேட்டாலோ அல்லது திடீரென்று மொபைல் சுவிட்ச் ஆப் ஆகினாலோ மொபைலை சரி செய்து கொள்வது நல்லது.
மேலும் இவ்வாறு இருந்தால் மொபைல் வெடித்து போகும் வாய்ப்பும் உள்ளது.
டிப்ஸ்- 2
புதிதாக நீங்கும் மொபைல் அல்லது ஏற்கனவே நீங்கள் வைத்து பயன்படுத்தும் மொபைல் இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அதனுடைய பேட்டரி ஆனது வீக்கம் அடைந்து இருக்கிறதா என்பதை கவனித்து கொள்ள வேண்டும். இதுவும் மொபைலில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
டிப்ஸ்- 3
ஸ்மார்ட் போன் நீண்ட நேரம் சார்ஜ் செய்யும் போது போனில் உள்ள அயன் லித்தியம் பேட்டரி ஆனது சார்ஜ் நிலையினை விட்டு டிஸ்சார்ஜ் நிலையானது அடைந்து விடுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் பேட்டரி பலவீனம் அடைந்து விரைவில் செயல்திறன் குறைந்து பேட்டரி வெடிக்கும் நிலை கூட வரவிருக்கும். அதனால் சரியான அளவில் தான் சார்ஜ் செய்ய வேண்டும்.
டிப்ஸ்- 4
மொபைல் சார்ஜ் செய்யும் போது வழக்கத்துக்கு மாறாக சூடாக மாறிவிடும். இவ்வாறு இருந்தாலும் இதில் மொபைல் பேட்டரியில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை உணர்த்துகிறது. ஆகையால் உடனே மொபைலை சரி செய்ய வேண்டும்.
மொபைல் வாங்கும் போது அதில் நல்ல பேட்டரி பொருத்தி இருந்தாலும் கூட அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கவனிக்காமல் விட கூடாது. ஏனெனில் இதுபோன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் கூட மொபைலை வெடிக்கும் அளவிற்கு மாற்றி விடும்.
உங்கள் WiFi ஸ்பீடா ஒர்க் ஆகனுமா.. அப்போ இந்த விஷயத்தை செய்யுங்கள்.. |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |