வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு

Updated On: March 23, 2020 5:36 AM
Follow Us:
mygov corona helpdesk whatsapp
---Advertisement---
Advertisement

கொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு / Mygov corona helpdesk whatsapp..!

Mygov corona helpdesk whatsapp:- இந்திய குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி இருக்கிறது. அதை பற்றின விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.

newகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

Mygov corona helpdesk whatsapp:-

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில் மத்திய அரசு வாட்ஸ்அப் (Mygov corona helpdesk whatsapp) செயலியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கியிருக்கிறது.

சாட்பாட் மூலம் இயங்கும் இந்த அக்கவுண்ட்டிற்கு MyGov Corona Helpdesk என பெயரிடப்பட்டுள்ளது.

mygov corona helpdesk whatsapp

அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் – 9013151515 என்ற எண்ணை தங்களது மொபைலில் சேமித்துக் கொண்டு MyGov Corona Helpdesk-க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

புதிய சாட்பாட் சேவையானது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே பரவும் போலி தகவல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்கும்.

இந்தியாவில் இதுவரை சுமார் 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now