வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நத்தம் பட்டா ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி..?

Updated On: January 30, 2026 5:45 PM
Follow Us:
Natham Patta Online Download in Tamil
---Advertisement---
Advertisement

Natham Patta Online Download in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய நிலையில் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்படி இருக்கையில் நாமும் நம்மை அப்டேட் செய்யவேண்டும். முன்பெல்லாம் ஏதாவது நமக்கு தேவை என்றால் அதாவது, உதாரணத்திற்கு ஆதார் கார்டில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் இ-சேவை மையம் அல்லது பிரௌசிங் சென்டருக்கு தான் செல்வோம்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே ஆன்லைன் மூலம் எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள். சரி இது தான் நமக்கு தெரிந்த விஷயமாச்சே..! சரி இன்று நாம் நம் பதிவின் வாயிலாக நத்தம் பட்டா ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

தொலைந்த சொத்து பத்திரத்தை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி

நத்தம் பட்டா ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி..?

இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு குட்நியூஸை வெளியிட்டுள்ளார். அதாவது கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுடைய நத்தம் வீட்டு மனைக்கு பட்டா வாங்குவதில் அதிக சிரமமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

எனவே இதற்கு தீர்வு தரும் விதமாக நத்தம் பட்டா முதல் நில ஆவணங்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். அந்த வகையில் இன்று நாம் நத்தம் நிலத்தின் பட்டாவை ஆன்லைனில் எப்படி பெறுவது என்று படிப்படியாக பார்க்கலாம் வாங்க..!

Step -1:

natham patta online

முதலில் உங்கள் போனில் இருக்கும் Google Chrome உள்ளே செல்லுங்கள். பின் அதில் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step -2:

natham patta online

பின் அதில் கீழ நகர்த்தி சென்றால் (பட்டா / சிட்டா) விவரங்களை பார்வையிட என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step -3:

natham patta online

பின் ஒரு புதிய திரை தோன்றும். அதில் உங்களுடைய விவரங்கள் கேட்கும். அதை நீங்கள் சரியாக கொடுக்க வேண்டும். அதாவது,

  • உங்களுடைய மாவட்டத்தின் பெயர்
  • நீங்கள் இருக்கும் வட்டத்தின் பெயர்
  • கிராமத்தின் பெயர்
  • பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர்
  • அடுத்து நிலத்தின் வகை – அதாவது ஊரகம் (Or) நத்தம் ( ஊரகம் என்றால் உங்களுடைய வயல் சார்ந்த இடங்கள், நத்தம் என்றால் உங்கள் வீடு சார்ந்த நிலங்கள்)
  • அடுத்து உங்கள் நிலத்தின் புல எண்
  • மற்றும் உட்பிரிவு எண் கொடுக்க வேண்டும்.

Step -4:

கடைசியாக அதில் காட்டும் Captcha எண்ணை கொடுத்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நீங்கள் சரியாக கொடுத்தால் உங்கள் நத்தம் நிலத்தின் பட்டாவை நீங்கள் ஆன்லைன் மூலமாக பார்த்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now