Phone Setting Secrets in Tamil
பொதுநலம்.காம் பதிவின் நேயர்களுக்கு அன்பு வணக்கம்… இன்றைய பதிவின் மூலம் உங்கள் போனில் இருக்கும் Setting -ல் மறைந்துள்ள ரகசியத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். எல்லாரிடமும் கட்டாயம் ஸ்மார்ட் போன் இருக்கும். ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்றும் சொல்லலாம். ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த Setting -ல் மறைந்துள்ள ரகசியம் தெரியுமா..? தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
Setting -ல் மறைந்துள்ள ரகசியம்:
Step -1

- முதலில் உங்கள் போனில் இருக்கும் Setting என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- அதில் Developer Options என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் கீழே நகர்த்தி செல்ல வேண்டும். அதில் Show Touches என்ற ஆப்ஷனை On செய்ய வேண்டும்.
- பின் நீங்கள் போனை Touch செய்யும் போது ஒரு வட்ட வடிவில் Point போன்ற ஒரு அமைப்பு தோன்றும்.
Step -2
- அடுத்து அதன் கீழ் Pointer Location என்ற ஆப்ஷன் இருக்கும் அதை On செய்ய வேண்டும்.
- பின் நீங்கள் Touch செய்யும் போது Pointer போல் கோடு போன்ற அமைப்பு தோன்றும்.
Step -3

- அதன் கீழ் Show Layout Bounds என்ற ஆப்சன் இருக்கும் அதை On செய்து கொள்ளுங்கள்.
- பிறகு நீங்கள் போனை பயன்படுத்தும் போது Layout போன்ற அமைப்பு தோன்றும்.
Step -4

- பின் அடுத்து அதன் கீழ் பகுதியில் Force RTL Layout Direction என்ற ஆப்சன் இருக்கும். அதை On செய்யுங்கள்.
- இந்த ஆப்ஷனை ஆன் செய்வதால் வலது பக்கத்தில் இருக்கும் அமைப்பை இடது பக்கத்தில் வைத்து கொள்ள முடியும்.
- இதனால் போனில் இருக்கும் அமைப்புகளை வலது இடது என மாற்றி கொள்ள முடியும்.
Step -5
- சில ஸ்மார்ட் போன் Setting -ல் Developer Options என்ற ஆப்சன் இருப்பதில்லை.
- இந்த ஆப்சன் இல்லாதவர்கள் உங்கள் போன் Setting -ல் About Phone என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் device information என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Build Number என்ற ஆப்ஷனை 7 முறை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- பின் உங்கள் setting -ல் Developer Options என்ற ஆப்சன் தோன்றும். அதில் சென்று நீங்கள் இந்த அமைப்புகளை மாற்றி கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |