Pradhan Mantri Matru Vandana Yojana Apply Online in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மத்திய அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று நம் அனைவருக்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி அரசு அறிவித்த திட்டங்களை பற்றி நாமும் நம் பதிவின் வாயிலாக அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் மத்திய அரசானது பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அப்படி பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஓன்று தான் இந்த பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana Scheme). இந்த திட்டமானது இந்திய முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நாம் இன்று இந்த பதிவின் வாயிலாக இந்த பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000 அறிவிப்பு..! பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்
மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டமானது கர்ப்பிணி பெண்களுக்காகவும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூபாய் 11,000/- வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை 3 தவணைகளில் பணம் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் இலவச மருந்துகள், கர்ப்பத்திற்கு முன் பின் என்று பரிசோதனை போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஆகையால் இந்த திட்டத்தில் பல பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
எனவே நாம் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஸ்டெப் -1:
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் முதலில் உங்களுடைய Google Chrome உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டெப் -2:
பின் அதில் https://pmmvy.wcd.gov.in/ என்று Type செய்து அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் -3:
அதில் Citizen Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் ஒரு புதிய திரை தோன்றும். அதில் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். பின் Pdf திறக்கப்படும்.
ஸ்டெப் -4:
அந்த Pdf இல் கேட்கப்பட்டிருக்கும் உங்களுடைய தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும். பின் அதில் கேட்கப்படும் ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டும்.
ஸ்டெப் -5:
இறுதியாக Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இப்போது உங்களுடைய விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு நிதியுதவி உங்களுடைய வங்கிக் கணக்கில் ஏற்றப்படும்.
மேலும் இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் அங்கன்வாடி அல்லது சுகாதார மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அங்கு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் விண்ணப்பபடிவத்தை சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை
- குழந்தை பிறப்பு சான்றிதழ்
- முகவரி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- பான் கார்டு
- பேங்க் பாஸ் புக்
- போன் நம்பர்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |