கேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு:-
சாம்சங் நிறுவனம் சமீபகாலமாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மாட்போன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளதாம்.
அதுமட்டும் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் விலை குறைக்கப்பட்ட இந்த ஸ்மாட்போன் மாடலை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் வலைத்தளங்களில் வாங்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை:
சாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ6 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ8 ஸ்டார் சாதனத்தின் முந்தைய விலை ரூ.34,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி ஏ6 பிளஸ்:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மேலும் விலை குறைக்கப்பட்ட இந்த சாதனத்தை அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
கேலக்ஸி ஏ6 பிளஸ் செயலி:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி ஏ8 ஸ்டார்:
6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் 3டி கிளாஸ் உடன் ஸ்லிம்மாக வருகிறது.
குவல்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் , மேலும் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா கொண்ட டூயல் கேமரா வசதியுடன் வருகிறது.
24 எம்பி செல்ஃபி கேமரா வசதி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.