சாம்சங்கின்(samsung) புதிய மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்:
சாம்சங் (samsung) என்பது தென்கொரியாவின், சியோலில் உள்ள சேம்சங் டவுனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். 2008ஆம் ஆண்டில் 173.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருவாயாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிறுவனம் இதுவே என்பதுடன், தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். சாம்சங் நிறுவனம் தங்களது வடிக்கையாளர்களுக்குக் அதிக சலுகைகளை வழங்கிக்கொண்டே வருகிறது என்றாலும் தற்போது சாம்சங்கின் (samsung) புதிய மடங்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அவற்றை பற்றிய சில விவரங்களை பற்றி இவற்றிலே நாம் காண்போம்.
சான் பிரான்சிஸ்கோ அறிவிப்பு :
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங்கின் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங், முழுமையாக டேப்லெட் போன்ற செயல்பாட்டை வழங்கும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங்கின் (samsung) மடக்கக்கூடிய செல்லிடப்பேசி சிறப்பம்சம் (ஃபோல்டபிள் போன்) ஒரு சோதனை ஓட்டமாக இது இருக்கும்.
விமர்சகர்கள் மத்தியிலும், சந்தையிலும் இது குறித்த கருத்து எப்படி உள்ளது என்பதைப் பார்க்கும் முயற்சியாக இதனை சாம்சங் செய்துபார்க்க உள்ளதாக தெரிகிறது.
“மடக்கக்கூடிய செல்லிடப்பேசிகளை விற்க ஆரம்பிக்கும் போது முதலில் அது ஒரு மந்தமான சந்தையாகவே இருக்கும். ஆனால் நிச்சயமாக அது விரிவடைந்து விடும்” என்று சாம்சங் செல்லிடப்பேசி உயரதிகாரி டி.ஜே.கோ குறிப்பிட்டார்.
“இந்த மடக்கக்கூடிய செல்லிடப்பேசி உலகளவில் கிடைக்கப் பெறும், அது ஆறு மாதங்களுக்கு பின்னர் காணாமல் போய்விடாது” என்றும் டி.ஜே.கோ நம்பிக்கை தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் சாம்சங்கின் அடுத்த சாதனம் குறித்து அறிமுகப்படுத்தப்படும் என்றும், நவம்பர் மாதத்தில் அது வெளியாகிவிடும் என்றும் கோ உறுதியளித்தார்.
முன்னதாக செப்டம்பரில், இந்நிறுவனம் இவ்வகை மடக்கக்கூடிய செல்லிடப்பேசிகளின் ஒரு டீசரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.