குட்டி பிரிண்டர் – இதென்னயா புதுசா இருக்கு..!

small printer

உங்கள் போட்டோக்களை உடனே பிரிண்ட் எடுக்கணுமா – இதோ உங்களுக்கான ஒரு குட்டி பிரிண்டர் (small printer):-

அது வேற ஒன்னும் இல்லைங்க hp sprocket plus பிரிண்டர் (small printer) தான்.  இதை நீங்க ரொம்ப ஈஸியா உங்களுடைய பாக்கெட்டிலே வைத்துக்கொள்ளலாம்.

நீங்க உங்கள் காதலர், பிரண்ட்ஸ் கூட இல்லனா குடும்பத்தோடு விழாக்கள் மற்றும் சுற்றுலா போறீங்களா.? அப்படின்னா  இது உங்களுக்கு கண்டிப்பா தேவைப்படக்கூடிய ஒரு பிரிண்டர் (printer) தான். இந்த பிரிண்டரை ரொம்ப ஈஸியாக பயன்படுத்தலாம்.

உங்களுக்கு தேவையான போட்டோக்களை உடனே பிரிண்ட் பண்ணி உங்க காதலன் (அ ) காதலி, பிரண்ட்ஸ், குடும்பத்தார்க்கு  கொடுத்து அசத்துங்க.

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

மேலும் இந்த hp sprocket plus பிரிண்டரை (printer) சார்ஜ் செய்வதும் ரொம்ப ஈஸி. நம்முடைய மொபைல்  சார்ஜ்ரை வைத்து எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் பண்ணிக்கலாம்.

இந்த பிரிண்டர் (printer) மூலம் ஸ்டிக்கர், போட்டோ ஷீட் பயன்படுத்தி உங்கள் போட்டோக்களை  ஸ்டிக்கர் போல கூட பிரிண்ட் செய்துக் கொள்ளலாம்.

Tv & Fridgeக்கு இனி இதை Try பண்ணுங்க..!

குட்டி பிரிண்டர்(small printer) டெக்னாலஜி:

பிரிண்டர்- னு  சொல்றீங்க. இதுல இங்க் தேவைப்படும் அதுக்கு வேற செலவு ஆகும்-னு யோசிக்கிறீங்களா? இனி அதை பற்றிய கவலையை விடுங்க. இந்த பிரிண்டரில் (printer) பயன்படுத்தக்கூடிய டெக்னாலஜியே வேற, ஜிங்க் (zink)  டெக்னாலஜி மூலமாக உங்கள் போட்டாக்களை ஈஸியாவே பிரிண்ட் (print) பண்ணிடலாம்.

குட்டி பிரிண்டர்(small printer) போட்டோ சைஸ்:

போட்டோ சைஸ் பார்த்தீங்கன்னா உங்கள் பாக்கெட்டில் வைக்கக்கூடிய சைஸ் தான் (5.8 x 8.6)CM அதாவது கிட்டத்தட்ட (2.3 x 3.4) Inch கொண்ட சைஸில் வருது.

குட்டி பிரிண்டர்(small printer) வேலை செய்யும் விதம்:

இதை எப்படி பயன்படுத்துவதுனா இந்த குட்டி பிரிண்டர் (printer) முழுக்க முழுக்க ப்ளூடூத் சப்போர்ட் -ல தான் ஒர்க் ஆகுது.
இதுக்கு உங்களுடைய மொபைலில் hp sprocket plus பிரிண்டர் (printer) app – ஐ பிளே ஸ்டாரிலிருந்து டவுன்லோடு பண்ணுங்க. இதை ஒரு முறை கனெக்ட் (connect) செய்து எப்போதுலாம் போட்டோ பிரிண்ட் (print)
வேண்டுமோ அப்போதுலாம் பயன்படுத்திக்கலாம்.

இதனுடைய முக்கியமான விஷயமே வெயிட் தான் வெறும் 200 கிராம் தான். நீங்கனு மட்டும் இல்லை உங்கள் குழந்தைகளும் ஈஸியா உபயோகப் படுத்தலாம்.

இத உடனே வாங்கி உங்களுக்கு தேவையான போட்டோக்களை உடனே பிரிண்ட் பண்ணி உங்க காதலன் (அ ) காதலி, பிரண்ட்ஸ், குடும்பத்தார்க்கு
கொடுத்து அசத்துங்க.

அவங்களும் அசந்து போவாங்க நிச்சயமாக…!

திருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.