Smart Phone App Install And Uninstall
இந்த கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போன் வந்ததற்கு பின் நாம் அனைவருமே மாறிவிட்டோம் என்றே சொல்லலாம். நாம் நம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட போனில் மூழ்கி இருக்கின்றோம்.
போன் பயன்படுத்தலாம் ஆனால் அதிலேயே மூழ்கி இருக்க கூடாது. நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் ஸ்மார்ட் போன் நமக்கு நன்மையா தீமையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு முக்கியமான Settings பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Smart Phone App Install in Tamil:
அனைவருமே ஸ்மார்ட் போனில் பல விதமான ஆப்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். நமக்கு பிடித்த ஆப்களை ஏற்றினால் தான் நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்த முடியும் என்று நமக்கு தெரியும். அப்படி நாம் ஆப்களை ஏற்றும் போது அந்த ஆப் Secure ஆனதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு Gaming ஆப் ஏற்றுகிறீர்கள். அது Secure ஆனதா என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்.
அதற்கு முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings உள்ளே செல்ல வேண்டும்.
பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Google என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை கிளிக் செய்து உள்ளே சென்று Security என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Google Play Protect என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் மேலே Settings போன்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் Scan Apps With Play Protect என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அது OFF செய்யபட்டபட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
இதுபோல செய்வதால் நீங்கள் எந்த ஆப் ஏற்றினாலும் இந்த Scan Apps With Play Protect என்ற ஆப்சன் அதை Check செய்து அந்த ஆப் Secure ஆ இல்லையா என்பதை நமக்கு தெரிவிக்கும். அதனால் இந்த ஆப்ஷனை ON செய்து கொள்ளுங்கள்.உங்க ஸ்மார்ட் போனில் இந்த Settings பற்றி தெரிஞ்சி வச்சிக்கோங்க..! அதான் நல்லது |
ஆப் Uninstall செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை:
நம்மில் பலரும் ஆப் Uninstall செய்யும் போது இந்த தவறை தான் செய்கின்றோம். சரி நாம் ஒரு ஆப்பை Uninstall செய்ய போகிறோம் என்றால், அந்த ஆப்பை மேலே இழுத்து விட்டு Uninstall செய்வோம். இல்லையென்றால் அந்த ஆப்பை கிளிக் செய்து Remove என்று கொடுப்போம். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று.
நீங்கள் ஒரு ஆப்பை Uninstall செய்ய போகிறீர்கள் என்றால், முதலில் அந்த ஆப்பை Long Press செய்ய வேண்டும். பின் அதில் சிறிய திரை தோன்றும்.
அதில் App Info என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின் அதில் கீழே Clear Data என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து டேட்டாவை Delete செய்ய வேண்டும்.
அதன் பிறகு தான் அந்த ஆப்பை Uninstall செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் நீங்கள் Uninstall செய்த ஆப் உங்கள் போனில் இருந்து முழுமையாக Delete ஆகிவிடும். அதனால் இனி ஆப் Uninstall செய்யும் போது இப்படி செய்யுங்கள்.
Smart Phone -ல இந்த Settings எல்லா இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |