Message App Settings in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தன இந்த பதிவில் கூறப்போகிறேன். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும். இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. உள்ளங்கையில் உலகமே இருக்கிறது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே ஸ்மார்ட் போன் தான்.
அப்படி நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மைகளும் தீமைகளும் இருக்கிறது. அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Messaging ஆப்பில் மாற்ற வேண்டிய Settings என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Smartphone Message App Settings in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Privacy என்ற ஆப்சன் இருக்கும். சில போன்களில் Security & Privacy என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -2
அடுத்து அதில் Permission Manager என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டேப் -3
பின் ஒரு திரை தோன்றும். அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் SMS என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4
SMS என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் ஒரு புதிய திரை ஓபன் ஆகும். அதில் உங்கள் போனில் இருக்கும் சில ஆப்கள் இருக்கும்.
வாட்சப்பில இனி CHAT-களை Lock செய்து கொள்ளும் அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா |
எந்த ஆப் எல்லாம் உங்களுக்கு வரும் SMS -யை படிக்க கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த ஆப்பை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தால் அதில் Allow மற்றும் Deny என்ற ஆப்சன் இருக்கும். அதில் Deny என்ற ஆப்ஷனை கொடுத்தால் போதும்.
வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |