Smartphone Mistakes in Tamil
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மாட் போன்களை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் ஸ்மார்ட் போனின் தேவை அதிகமாக இருக்கின்றது. ஸ்மார்ட் போனை பயன்படுத்த ஆரம்பித்ததும் மக்கள் மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதே மறந்து விட்டனர். ஸ்மார்ட் போனை நாம் பயன்படுத்துகிறோம் என்பதை விட ஸ்மார்ட் போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்று சொல்லலாம்.
இந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் தேவை அதிகமாக உள்ளது. ஸ்மார்ட் போனில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நம்மை அறியாமலே போனில் சில தவறுகளை செய்கின்றோம். அது என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
Smartphone Mistakes in Tamil:
முதலில் உங்கள் போனில் கண்டிப்பாக லாக் போட வேண்டும். லாக் போடாமல் போனை பயன்படுத்தாதீர்கள். இது போல் எல்லா ஆப்களுக்கும் ஒரே மாதிரியான லாக்கை பயன்படுத்தாதீர்கள். மேலும் 6 மாதத்திற்கு ஒரு முறை லாக்கை மாற்றுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் போனின் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்
தேவையில்லாத எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள். அதாவது PLAY ஸ்டோரில் ஆப்பை இன்ஸ்டால் செய்யாமல் Free Downlaod என்ற ஆப்ஷனில் எந்த வித ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.
உங்களது போனில் Free wifi கிடைக்குது என்று பயன்படுத்தாதீர்கள். இப்படி Free wifi பயன்படுத்தினால் ஹேக்கர்ஸ் ஈசியாக உங்களின் தகவல்களை திருடுவார்கள். முடிந்தவரை உங்களது டேட்டாவை பயன்படுத்துங்கள்.
போனின் சார்ஜரை தவிர மற்ற போன்களின் சார்ஜரை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை உங்களது சார்ஜரை பயன்படுத்துங்கள்.
தினமும் போனை switch ஆப் செய்து ஆன் செய்யுங்கள். அல்லது Restart செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் எப்படி புத்துணர்ச்சியோடு இருக்கின்றீர்களோ அது போல் உங்கள் போனும் புத்துணர்ச்சியோடு இருக்க போனை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.
மொபைலில் பேக் கவர் இல்லாமல் பயன்படுத்தாதீர்கள். கட்டாயம் பேக் கவரை தரமானதாக பயன்படுத்துங்கள்.
Bluetooth தேவை உள்ள போதும் மட்டும் ஆனில் வைத்திருங்கள். மற்ற நேரங்களில் ஆப் செய்து வைத்திடுங்கள். ஏனென்றால் ஆனில் வைத்திருந்தால் சார்ஜ் விரைவாக குறைந்துவிடும். மேலும் ப்ளூடூத் ஆனில் வைத்திருப்பதன் மூலம் வைரஸ்கள் போனில் நுழைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ மொபைல் போன் நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |