ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Smartphone Tricks And Hidden Features ..!

நாம் வாழும் இந்த நவீன காலத்தில், எந்தவொரு தொழில்நுட்ப கருவியும் / சாதனமும் நம்மை ஆச்சரியப்படுத்தி விடாது. ஆனால், அதன் அம்சங்கள் நம்மை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 (Smartphone Tricks And Hidden Features) இரகசிய அம்சங்கள் பற்றி இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

Smartphone Features List:1

அலார கடிகாரத்தை ஸ்னூஸ் செய்ய:- பொதுவாக காலையில் முன்கூட்டியே எங்கயாவது போகவேண்டும் என்று, காலை பொழுதில் அலாரம் வைப்போம், வைக்கும் அந்த அலாரம் ஓசை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அலார ஓசையை நீங்கள் வெறுக்கிறீர்களா? அரை தூக்கத்தில் அதை ஸ்னூஸ் செய்ய திணறுகிறீர்களா? கவலையை விடுங்க.

அடுத்த முறை வெறுமன, வால்யூம் பொத்தான்களில் ஒன்றை அல்லது பவர் பொத்தானை அழுத்துங்கள் போதும். இவ்வாறு செய்வதினால் அடுத்த 9 நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் அலாரம் அடிக்கும். கண்டிப்பாக நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கவும்–> வாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…

Smartphone Features List :2

ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் சென்ட் ஆனதையும், ரிஸீவ் ஆனதையும் பார்க்கலாம் – எப்படி என்று பார்ப்போம் வாங்க, இது மற்றொரு ஆச்சரியமான ஐபோன் அம்சம் ஆகும்.

ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் சென்ட் ஆனதையும், ரிஸீவ் ஆனதையும் பார்க்க திரையில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் செய்யவும்.

Smartphone Features List :3

உங்களை அழைக்கும் நபரின் பெயரை நீங்கள் கேட்கலாம்:- மொபைல் பாக்கெட்டில் அல்லது பையின் அடியில் இருக்கும் போது, திடீரென வரும் அழைப்புகளால் நீங்கள் வெறுப்பு அடைகிறீர்களா?

கவலை வேண்டாம், வரும் அழைப்புகளை இயர்பீஸ்கள் தானாகவே எடுக்க ஐபோனில் உள்ள அனௌன்ஸ் கால்ஸ் (Announce Calls) பயன்முறையை செயல்படுத்தினால் போதும். இதை செயல்படுத்தினால் உங்களை அழைக்கும் நபரின் பெயரை நீங்கள் கேட்கலாம்.

Smartphone Tricks And Hidden Features :4

பிறர் உங்களின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது உதவும் கைடட் அக்சஸ்:- கைடட் அக்சஸ் அம்சம் ஆனது வேறு யாராவது உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது நீங்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மறைக்க அனுமதிக்கும் ஒரு செயல்பாடு ஆகும்.

இதை செயல்படுத்த ஜெனெரல் செக்ஷன் சென்று பின் அக்சஸ்பிலிட்டியை அணுகவும்.! இப்போது பயனுள்ள கூகுள் பிளே (Google Play) அம்சங்களை பார்க்கலாம்.

Smartphone Tricks And Hidden Features :5

ஆட்டோ அப்டேட்களை டிசேபிள் செய்வது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த விதமான குழப்பமும் அல்லது சேமிப்பு பற்றாக்குறையும் வர கூடாது என்று நீங்கள் விரும்பினால் கூகுள் பிளேவின் ஆட்டோ அப்டேட்டை டிசேபிள் செய்து வைப்பது நல்லது.

குறிப்பாக இந்த அம்சம் பழைய அல்லது பலவீனமான தொலைபேசிகளைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Smartphone Tricks And Hidden Features :6

கூகுள் பிளேவிற்கான பேரண்டல் கண்ட்ரோல் செயல்பாடு:- இந்த பேரண்டல் கண்ட்ரோல் செயல்பாடு அம்சத்தின் உதவியின் கீழ், நீங்கள் உங்கள் குழந்தையை பாதுகாக்க முடிகிறது.

இது உங்களின் பிள்ளைகளுக்கோ அல்லது அவர்களின் வயத்திற்கோ பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அவர்களின் கண்களில் இருந்து மறைக்க உதவும். இதில் நீங்கள் தேவையான வயது வரம்புகளையும் அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Smartphone Tricks And Hidden Features :7

 

ஆப்ஸ்களை பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் :- கூகுள் பிளேவில் மை விஷ்லிஸ்ட் எனும் அம்சம் உள்ளது.

அதில் குறிப்பிட்ட ஒரு விளையாட்டை உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால் அதை நீங்கள், உங்களின் விருப்பப்பட்டியலில் வைக்கலாம்.

எனவே நீங்கள் விரும்பும் போதெல்லாம், நீங்கள் உங்கள் விருப்பப் பட்டியலைத் திறந்து சேமித்து வைத்திருக்கும் எல்லா பயன்பாடுகளையும் நிறுவலாம்.

இதையும் படிக்கவும்–> இனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது ஏன் தெரியுமா?

Smartphone Hacks And Tricks :8

நிறுவப்பட்ட பயன்பாடுகளின் லைப்ரரி:- ஒரு புதிய தொலைபேசியை வாங்கி உள்ளீர்களா? மீண்டும் அனைத்து ஆப்ஸ்களை தேட வேண்டுமா? அது ஒரு பிரச்சனை இல்லை.

உங்கள் பயன்பாடுகள் அனைத்தும் லைப்ரரியில் சேமிக்கப்படும். அங்கு சென்று, நீங்கள் நிறுவ விரும்பும் பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து, பதிவிறக்குங்கள். அவ்வளவு தான்! இப்போது சில அட்டகாசமான ஆண்ட்ராய்டு அம்சங்களை காணலாம்!

Smartphone Hacks And Tricks :9

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கவும்:- உங்கள் தொலைபேசி பேட்டரி ஆனது சற்று நீண்ட நேரம் வாழ, நீங்கள் கலர் ஸ்பேஸ் ஆப்ஷனில் உள்ள மோனோக்ரோமி (Monochromacy) முறையை தேர்வு செய்யலாம்.

இதன் விளைவாக ஸ்மார்ட்போன் திரையின் வண்ணங்கள் குறைக்கப்பட்டு, பேட்டரியின் வாழ்நாள் நீட்டிக்கப்படும்.

Smartphone Hacks And Tricks :10

எக்ஸ்டர்னல் ஸ்ட்ரோஜில் தகவல்களை சேமிப்பது எப்படி? பயனர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருக்கும் காரணத்தால் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்த பயனுள்ள செயல்பாட்டை பெரும்பாலும் முடக்கலாம்.

மைக்ரோ எஸ்டி அட்டையில் தரவைச் சேமிக்கும் படி உங்கள் ஸ்மார்ட்போனை அனுமதிக்கவும். ஆனால் இந்தச் செயல்பாட்டுடன் கவனமாக இருங்கள்: சில பயன்பாடுகள் ஒழுங்காக இயங்காமல் போகலாம்!

Android Tricks :11

புதிய ஆன்ட்ராய்டுகளில் மல்டி விண்டோ முறை:- மல்டி விண்டோ முறைமை ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் காணக்கூடிய ஒரு புதிய அம்சமாகும். ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளில் வேலை செய்ய வேண்டுமா? இது உதவும்.

அதற்கு நீங்கள் போர்ஸ் ஆக்டிவிடீஸ் டு பி ரீ சைஸபிள் பார் மல்டி விண்டோவை (Force activities to be re-sizable for multi-window) ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

Android Tricks :12

கேட் கலெக்டிங் ஈஸ்டர் எக்ஸ்:- இந்த இரகசிய அம்சம் ஆனது டெவலப்பர்களால், ஆண்ட்ராய்டு 7 இல் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் வழியாக நீங்கள் பூனைகளை சேகரிக்க முடியும். ஒரு விளையாட்டை அணுகலாம். இது போகிமொன் கோ கேமை ஒத்திருக்கிறது, ஆனால் இதில் எந்த விதமான மெய்நிகர் யதார்த்தமும் இருக்காது.

Smartphone Hacks And Tricks :13

போனஸ்: க்ளோஸ்அப்களைக் கொண்ட ஒரு படத்தை  பெரிதாக எடுக்கலாம் – சிறிய விவரங்களைப் பற்றிய சிறந்த பார்வை பெற, உங்களுடைய கேமரா தொலைபேசி மற்றும் ஒரு பழைய லேசர் லைட்டர் இருந்தால் போதும், அந்த லேசர் லைட்டரின் லென்ஸை கழட்டி கேமராவின் பின்புற லென்ஸின் கண்ணாடி மீது செல்லோ டேப் போட்டு ஒட்டிவிட்டால் போதும்!

இதையும் படிக்கவும்–> ந்துவிட்டது சூப்பர் MI Soundbar அதுவும் மிக குறைந்த விலையில்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.