இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

Advertisement

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

இலவசமாக எப்படி சார்ஜ் ஏற்றலாம், என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம். அதாவது நம்மளிடம் சூப்பர் ஸ்மார்ட் பேக் இருந்தா போதும். அந்த பேக்கை வைத்து கொண்டே மிக எளிதில் சார்ஜ் ஏற்றிட முடியும். அப்படி என்ன பேக் இருந்தா எளிதாக மொபைலுக்கும், பவர் பேங்குக்கும் சார்ஜ் ஏற்று விட முடியும் தெரியுமா? அதுதாங்க சோலார் பேக் (solar bag) இந்த பேக்கை வாங்கிட்டோம் என்றால் மிக எளிதில் சூரிய கதிர்கள் மூலம் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

இந்த சோலார் பேக்கை பற்றிய விவரங்களை பற்றித்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

சோலார் பேக்:

இந்த சோலார் பேக்கை (solar bag) பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த பேக்கில் பலவகையான அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த பேக்கில் சார்ஜர் ஏற்றி கொள்ளும் வசதியும் இருக்கின்றது. சாதாரணமாக இந்த பேக்கை வெளியே எங்கு வேணாலும் எடுத்து செல்ல முடியும், இந்த பேக் ஒரு வித்தியாசமான பாலிஷ்டரால் தைக்கப்பட்டதாம், இது வாட்டர் ப்ரூப்  இல்லை என்றாலும் தண்ணீர் பட்டால் மிக எளிதில் வெளியாகிவிடுமாம்.

குறிப்பாக இந்த பேக்குடன் இரண்டு டேட்டா கேபிள் மற்றும் solar panel தருவாங்க.

மேலும் சார்ஜர் ஏற்றுவதற்கு இந்த பேக்கின் ஓரத்தில் ஒரு ஓப்பன் வைத்துள்ளனர். இதன் மூலம் நாம் பவர் பேங்குக்கு சார்ஜர் ஏற்ற வேண்டும் என்றால் உள்புறமாக இணைத்து பவர் பேங்கை உள்ளேயே வைத்து சார்ஜர் ஏற்றி கொள்ளலாம்.

அல்லது வெளிப்புறமாக டேட்டா கேபிளை இணைத்து மொபைலுக்கு கூட சார்ஜர் ஏற்றி கொள்ளலாம்.

மேலும் இந்த வசதியை சூரிய ஒளியின் மூலமாக தான் பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதுவும் சன் ஸ்கை வெப்சைட்டு மூலம் விற்கப்படும் இந்த பேக்கோட விலை என்னவென்றால் ரூபாய்.1609/-

குறிப்பாக இந்த பேக்கை இந்தியன் வெப்சைட்டு மூலமாக வாங்க முடியாது, சைனிஸ் வெப்சைட்டு மூலமாகத் தான் ஆடர் செய்து வாங்க முடியும்.

இந்த பேக்கோட விலை ரூபாய் 1609/- ஆக இருந்தாலும் இந்த காலத்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கின்றது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement