Sign up for Telegram without a SIM card in Tamil
Telegram New Update in Tamil – Whatsapp எந்த அளவுக்கு பிரபலமானதோ அதேபோல்தான் Telegram-மும், தினமும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் இந்த Telegram ஆண்ட்ராய்டு ஆப்பும் கண்டிப்பாக இடம் பிடிக்கும். வாட்ஸ் அப் போலவே டெலிக்ராம் பயன்படுத்த நாம் நம்முடைய மொபைல் எண்ணை பதிவு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும். அதாவது Telegram-ல் மொபைல் நம்பர் இருந்தால் தான் அந்த செயலியை பயன்படுத்த முடியும் என்ற நிலை தற்பொழுது புதிய அப்டேட் மூலமாக Telegram செயலியில் இனி சிம் (SIM CARD) இல்லாமலே பதிவுசெய்ய முடியும், அதேபோல் Auto-delete option என பயனர்களுக்கு பயனுள்ள பல்வேறு அம்சங்களை இந்த புதிய அப்டேட் மூலமாக கொண்டு வந்துள்ளது Telegram. இது குறித்த முழுமையான விவரங்களை மற்றும் டெலெக்ராம்-ல் சிம் இல்லாமல் எப்படி அக்கௌன்ட் தொடங்குவது என்று இங்குக் காணலாம்.
டெலெக்ராம் புதிய அப்டேட் – Telegram New Update in Tamil:
No: 1
சிம் கார்டு இல்லாமலே டெலிகிராமை இயக்க முடியும். இதற்கு நீங்கள் Fragment platform-யில் கிடைக்கும் பிளாக்செயின் (blockchain-powered numbers) மூலம் இயங்கும் எண்களைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
No: 2
Telegram-யில் இருந்து தனி நபர் மெசேஜ்கள், குரூப் மெசேஜ்கள் போன்றவற்றை தானாகவே Delete ஆகும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதற்கென Auto-delete டைமர் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆக நீங்கள், 1 நாள், 1 வாரம், 1 மாதம் அல்லது நீங்கள் விரும்பிய குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மெசேஜ்களை ஆட்டோ டெலிட் செய்யலாம். இதற்கு நீங்கள் Telegram Settings-ற்கு செல்லுங்கள் பிறகு அதில் Privacy & Security என்பதை கிளிக் செய்யுங்கள், பிறகு Auto-Delete Messages என்ற மெனுவிற்குச் சென்று செட் செய்ய வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
No: 3
ஸ்பேம் மெசேஜ்களை முடக்கம் செய்யும் வசதிகளும் உள்ளது. நீங்கள் பெரிய குரூப்பில் இருந்தால் Manage Group > Administrators -யின் ஃபில்ட்டர் பகுதிக்குச் சென்று தேவையில்லாதவற்றை முடக்கலாம்.
No: 4
உங்கள் சுயவிவரத்தைப் பகிர தற்காலிக QR குறியீட்டை உருவாக்க முடியும். அதாவது QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் யாரும் உங்கள் ஃபோன் எண்ணை அறியாமலேயே மெசேஜிங் சேவையின் தொடர்பு பட்டியலில் உங்களைச் சேர்க்க இயலும். இதன் மூலம் மற்றவர்களுக்கு உங்கள் போன் எண்ணை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
Telegram பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
No: 5
இந்த புதிய டெலிகிராம் Update-யில் கூடுதலாக புதிய ஊடாடும் இமோஜியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
No: 6
Telegram-யில் புதிய ஒவ்வொரு Chats-ம் எவ்வளவு மெமரிகளை பெற்றுள்ளது என்பதை எளிமையாகப் அறிய முடியும். இதன் மூலம், அதிக மெமரி கொண்டுள்ள Chat-யின், வீடியோ, படங்கள் உங்களுக்கு தேவையில்லை எனில், அவற்றை டெலிட் செய்து கொள்ளலாம், ஃபில்டர் செய்துகொள்ளலாம்.
மேலும் இந்த அப்டேட் Telegram v9.2 எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |