டெலிக்ராமில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Telegram Tricks in Tamil

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக வாட்சப் பயன்படுத்துவீர்கள். ஆனால் Telegram ஒரு சிலர் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்ல போனால் டெலெக்ராமில் இருக்கும் விஷயங்கள் சிலருக்கு  தெரிவதில்லை. இந்த பதிவை படித்த பிறகு டெலிகிராமில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என்று ஆச்சிரியப்படுவீர்கள். வாங்க டெலிகிராமில் இருக்கும் ட்ரிக்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Telegram Gif Sticker in Tamil:

Telegram Gif Sticker in Tamil

Telegram ஓபன் செய்து மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் @gif vadivel என்று டைப் செய்தால் gif இமேஜ் வரும். அதில் உங்களுக்கு எந்த இமேஜை நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதை அனுப்பலாம்.

How To Send Timer Pic in Telegram in Tamil:

How To Send Timer Pic in Telegram in Tamil

நீங்கள் டெலிகிராமில் ஒருவருக்கு அனுப்பும் போட்டோவை நேர அடிப்படையில் ஆட்டோமெட்டிங்கா டெலீட் செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

நீங்கள் யாருக்கு போட்டோவை அனுப்பி அதை இந்த நேரத்திற்குள் டெலீட் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் CHAT -க்கு செல்லவும். அதில் எந்த போட்டோவை அனுப்ப வேண்டுமோ அந்த போட்டவை கிளிக் செய்து Timer என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

How To Send Timer Pic in Telegram in Tamil

அதில் எடுத்துக்காட்டுக்கு 10 நிமிடத்திற்கு பிறகு போட்டோ இருக்க கூடாது என்றால் 10 நிமிடம் என்று  செட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் இருக்கும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

Telegram Message Time Schedule in Tamil:

Telegram Message Time Schedule in Tamil

நீங்கள் செய்யும் மெசேஜை நேரத்திற்கு Schedule செய்யலாம். எடுத்துக்காட்டாக உங்களின் நண்பருக்கு பிறந்த நாள் என்று வைத்து கொள்வோம். அவர்களுக்கு வாழ்த்து இரவு 12 மணிக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமென்றால் அதை நீங்கள் Schedule செய்து கொள்ளலாம்.

நீங்கள் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவர்களின் Chat -க்கு செல்லவும். அதில் நீங்கள் என்ன வாழ்த்து சொல்கிறீர்களா அதை டைப் செய்து சென்ட் செய்யும் பட்டனை Long பிரஸ் செய்யவும். அதில் Schedule Message என்று இருக்கும்.

Telegram Message Time Schedule in Tamil

அதை கிளிக் செய்து எந்த நேரத்திற்கு Schedule ஆக வேண்டுமோ அந்த நேரத்தை பதிவு செய்து Send செய்ய வேண்டும்.

Telegram Send Silent Message In Tamil:

Telegram Send Silent Message In Tamil

நீங்கள் அனுப்புகின்ற மெசேஜ் NOTIFICATION இல்லாமல் SILENT ஆக Send செய்யலாம். அதற்கு மெசேஜை டைப் செய்து Send செய்யும் பட்டனை லாங் பிரஸ் செய்யவும். அதில் Send without sound என்பதை கிளிக் செய்து Send செய்தால் சத்தம் இல்லாமல் மெசேஜ் Send ஆகும்.

இதையும் படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 

 

Advertisement