தமிழக அரசின் திட்டம்
மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆனால் பல்வேறு வகையான திட்டங்களை அனைவருக்குமே தெரியாது. இனிமேல் தமிழக அரசின் திட்டங்களை அனைவருமே தெரிந்து கொள்ளலாம். வாட்சப் மூலம் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். இதற்கு மக்கள் நலன் பாட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வாங்க எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
TN Government Schemes Whatsapp in Tamil:
ஸ்டெப்:1
முதலில் வாட்சப்பிற்கு செல்லவும். அதில் 99445879944 என்ற நம்பரை SAVE செய்யவும்.
ஸ்டெப்:2
இந்த நம்பருக்கு Hi என்று மெசேஜ் செய்யவும். அதன் பிறகு அவர்கள் ஒரு sms அனுப்புவார்கள். அதில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று இருக்கும் அதில் உங்களுக்கான மொழியை தேர்வு செய்யவும்.
ஸ்டெப்:3
மொழியை தேர்ந்தெடுத்ததும் இனத்தை தேர்தெடுக்க வேண்டும். இனத்தை பதிவிட்டதும் சமூகம் கேட்கும் அதையும் பதிவிட வேண்டும்.
ஸ்டெப்:4
அதன் பிறகு மதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு அதில் நீங்கள் மாணவர் அல்லது விவசாயி, மாற்றுத்திறனாளி, தொழில்முனைவோர் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த ஆப்ஷனும் இல்லை என்றால் மேற்கண்ட எதுவுமில்லை என்று பதிவிட வேண்டும்.
ஸ்டெப்:5
நீங்கள் எந்த வகையை தேர்ந்தெடுத்ததும் வருமானம் கேட்கும் அதையும் பதிவிட வேண்டும். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் விவசாயி என்று send செய்தீர்கள் என்றால் அதற்கு தகுந்த Schemes என்ன என்னே இருக்கிறதோ அதெல்லாம் வரும்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |














