2 நிமிடத்தில் மொபைல் மூலம் ஈஸியா ட்ரெயின் டிக்கெட் நீங்களே புக் செய்யலாம்..!

how to train ticket booking online in mobile tamil

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? | How to Train Ticket Booking in Tamil

முன்னெல்லாம் ரயிலில் பயணம் செய்வதற்கு அந்த நேரத்திற்கு சென்று டிக்கெட் வாங்கி பயணிப்போம்.. இப்போதோ உலகமே இன்டர்நெட் மயமாகிவிட்டதால் எல்லாமே ஒரு மொபைலில் அடங்கிவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் இன்டர்நெட் வசதி இல்லாமல் செய்ய இயலவில்லை. ரயிலில் அந்த நேரத்திற்கு டிக்கெட் வாங்கிய காலம் மாறி பயணிகள் பெரும்பாலும் மொபைல் மூலமே ரயிலில் டிக்கெட் புக் செய்து விடுகிறார்கள். இந்த முறை படித்தவர்களுக்கு சுலபமாக அமைந்துவிட்டது. படிக்காதவர்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சற்று தடுமாறுகிறார்கள். எந்த இணைதளத்தில் சென்று எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்று குழம்பிவிடுகிறார்கள். அவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திட ரயிலில் டிக்கெட் முன்பதிவு ஈஸியா தெரியாதவர்கள் கூட எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு அப்டேட் செய்துள்ளோம்.. இதை ஒருமுறை படிங்க இனி நீங்களே ரயிலில் முன்பதிவு டிக்கெட் செய்துவிடலாம்..!

IFHRMS கருவூலம் Login செய்வது எப்படி

ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணுவது எப்படி?

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் மொபைலில் உள்ள Playstore-ல் IRCTC என்பதை டைப் செய்துக்கொள்ளுங்கள். பிறகு ITCTC Rail Connect என்பதை உங்களுடைய மொபைலில் Install செய்துக்கொள்ளவும்..

ஸ்டேப்: 2

பிறகு அதில் Train Ticket, Book Meal, Air Ticket என்ற மூன்று ஆப்ஷன் வரும். அவற்றில் ட்ரெயின் டிக்கெட் என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

அடுத்து Username, Password கேட்கப்படும். ஏற்கனவே நீங்கள் இதில் பதிவு செய்திருந்தால் மீண்டும் லாகின் செய்ய தேவையில்லை. பதிவு செய்யாதவர்கள் புதிதாக Username, Password கிரியேட் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

ரயில் நேர அட்டவணை 2022

 

ஸ்டேப்: 4

முதல் தடவையாக லாகின் செய்கிறீர்கள் என்றால் 4 டிஜிட் பின் நம்பர் கிரியேட் செய்ய வேண்டும். கிரியேட் செய்துவிட்டு என்டர் செய்யவும்.

ஸ்டேப்: 5

மறுமுறை நீங்கள் இதை ஓபன் செய்யும் போது Username, Password போட அவசியமில்லை. கிரியேட் செய்து வைத்துள்ள 4 பின் நம்பரை போட்டால் போதும்.

ஸ்டேப்: 6

இப்போது நீங்கள் எந்த ஊருக்கு பயணம் செய்ய போகிறீர்களா அந்த ஊரினை தேர்வு செய்துக்கொள்ளவும். உங்களுக்கு எந்த மாதிரியான Facilities (படுக்கை, சிட்டிங்)  வேண்டுமோ அதில் தேர்வு செய்துக்கொள்ளலாம்.

IRCTC-ன் புதிய சிறப்பம்சம்:

  1. இதில் சிறப்பம்சமாக லேடீஸ் தனியாகவும், தட்கல் போன்ற கோட்டாகளில் புக் செய்துக்கொள்ளலாம்.
  2. இதில் IRCTC wallet புக்கிங் மூலமாகவும் பணம் ட்ரான்ஸ்பர் செய்து புக்கிங் செய்யலாம்
  3. வெளியில் நீங்கள் ஏதேனும் டிராவல்ஸ் புக்கிங் செய்திருந்தாலும் அதனுடைய ஸ்டேட்ஸினை இதில் தெரிந்துக்கொள்ளலாம்.
இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil