Vodafone அசத்தலான திட்டங்கள்..!

Advertisement

அட இன்னைக்கு தாங்க காலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.399 திட்டத்திற்கு 20 ஜிபி டேட்டாவை அறிவித்தது. இதற்கு போட்டியாக Vodafone நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாம்.

அதுவும் இந்த திட்டங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Vodafone நிறுவனம் இப்போது ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 என்ற மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களில் உள்ள டேட்டா நன்மைகள் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பற்றி இவற்றில் காண்போம்.

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Vodafone வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5 டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 135 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மேலும் தினசரி 300 எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இதற்குமுன்பு வோடபோன் வழங்கும் ரூ.799-திட்டத்தில் கூடுதலாக 126 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 4.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவச கால் அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement