நீங்கள் Whatsapp பயன்படுத்துகிறீர்களா அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்..!

Advertisement

Whatsapp in tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய காலக்கட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துகிறோம். அப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள தவிர்க்க முடியாத ஒரு செயலி என்றால் அது Whatsapp தான்.

அப்படி நாம் அனைவருமே பயன்படுத்தும் Whatsapp பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இன்றைய பதிவில் Whatsapp பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Whatsapp App Information in Tamil:

Whatsapp in tamil

Whatsapp அல்லது Whatsapp Messenger என்பது ஒரு செய்தி பரிமாற்று செயலி ஆகும். இதனை தமிழில் பகிரி, புலனம் மற்றும் கட்செவி அஞ்சல் என்றெல்லாம் அழைக்கலாம்.

இந்த செயலின் வாயிலாக எழுத்துக்களான உரை செய்திகள் (Message), நிகழ்ப்படம்( Video) மற்றும் குரல் செய்திகள் (Voice Message) ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதுடன், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளமுடியும்.

இந்த Whatsapp செயலி ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு தொலைபேசி இயங்குதளங்களிலும் இயங்க வல்லது.

இதனை கணினியிலும் பயன்படுத்தலாம் அப்படி பயன்படுத்துவதற்கு உங்களின் Whatsapp செயலியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் போனின் தொலைபேசி எண் தேவை.

Whatsapp History in Tamil:

இந்த செயலி 2009 – ஆம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தின் முன்னால் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை பயன்படுத்தி இணையத்தின் உதவியுடன் தகவல்களை Whatsapp பயன்படுத்தும் மற்றொரு தனிநபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்த Whatsapp நிறுவனத்தை பிப்ரவரி 2014-ல் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து Facebook நிறுவனத்தினர் வாங்கிக்கொண்டார்கள். அதன் பிறகு Whatsapp 2015-ல் உலக அளவில் மிக பிரபலமான செய்தி பரிமாற்று பயன்பாடாக மாறியது.

2016-ல் Whatsapp இணைய தொடர்புக்கான முதன்மை வழிமுறையாக மாறியது. பிப்ரவரி 2020-க்குள் Whatsapp உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள மிக பிரபலமான செயலியாக மாறியது.

அதன் ஜனவரி 2018 இல், வாட்ஸ்அப் பிசினஸ் என்ற ஒரு தனி வணிக பயன்பாட்டை WhatsApp வெளியிட்டது.

Whatsapp -ல் இப்படி ஒரு Tricks இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement