வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Whatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா ?

Updated On: May 27, 2022 12:27 PM
Follow Us:
whats app Dark mode
---Advertisement---
Advertisement

whatsapp dark mode –காதலர்களுக்காக வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

ஆமாங்க இது லவ்வர்ஸ்க்கான ஒரு ஸ்பெஷலானா அப்டேட் தாங்க. இனிமேல் எந்த லவ்வர்ஸ்ம் இரவு தூங்கும் பொழுது அவங்க வீட்டில் யாருக்கும் தெரியாமல் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்.

whatsapp dark mode – அப்படினா என்னனு கேட்குறீங்களா :

இது லவ்வர்ஸ்க்கு மட்டுமின்றி சாதாரணமாக இரவில் அதிகம் மொபைல் யூஸ் பண்ற அனைவருக்கும் ரொம்பவே யூஸ்புல்லானா ஒரு அப்டேட் தாங்க.

ஆம் இரவில் கண்கூசாமல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வகையில் டார்க் மோட்(whatsapp dark mode) என்ற சிறப்பம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி பாருங்கள்..!

தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் செயலிகளில் வாட்ஸ் அப் நாம் அனைவருக்கும் இன்றியமையாதாக மாறிவிட்டது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பை கைப்பற்றிய பின் பல புத்தம் புதிய அப் டேட்களை கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.

வாட்ஸ் அப்பை நாம் இரவில் பயன்படுத்தும் போது அதிகப்படியான வெளிச்சம் தான் கண்களை கூசுவதாக வாடிக்கையாளர்கள் எண்ணினர். தற்போது அவர்களின் மனக்குறையை போக்கும் வகையில், இரவில் கண் கூசாதவாறு வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் முறையாக ‘டார்க் மோட் ‘ (Dark Mode) என்ற சிறப்பம்சம் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இது தொடர்பான கான்செப்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் இதனை இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.

Dark Mode (வெளிச்சத்தை குறைக்கும் டார்க் மோடு):

வாட்ஸ்ஆப்பின் ஸ்கிரீனை கருப்பு நிறத்தில் மாற்றிக்கொள்ளும் வசதி ’டார்க் மோடு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி யூ டியூப், ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளில் உண்டு. நோக்கியாவின் லூமியா சிரீஸ் கைப்பேசிகளில் இந்த வசதி இயல்பாகவே இடம்பெற்றிருந்தது. இரவு நேரத்தின் போது பயனாளிகள் கண்களுக்கு இதமாக ஒளிர்வை தரும் வகையில் இந்த டார்க் மோடு வசதி(whatsapp dark mode) வழங்கப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் கண்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மொபைல் ஒளி கதிர்களில் இருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த தகவலை உங்கள் நன்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களையும் வாட்ஸ் அப் அப்டேட் செய்து பயன் அடைய சொல்லுங்க….

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now