வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு..! மக்களே உஷார்..!

Advertisement

வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு… பயனர்களே உஷார்

Whatsapp information:

வாட்ஸ்ஆப் (whatsapp information) நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பகுதில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

வாட்ஸ்ஆப் (whatsapp information) நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்கவும்  ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிரடி விலைகுறைப்பு..!

 

உலகளவில் தற்போது அதிகளவு பயன்படுத்தி வரும் செயலிகளில் வாட்ஸ்ஆப் செயலியும் ஒன்று, அவற்றில் செய்திகளை அனுப்புதல், வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த வாட்சப்ஆப் மூலம் போட்டோஸ், வீடியோ என்ற பல விஷயங்களை மிக எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். 

மேலும் வாட்ஸ்ஆப் (whatsapp information) அம்சத்தில் பாதுகாப்பு பொறுத்தவரை அந்த நிறுவனம், மிக அதிக கவனத்தை செலுத்துகின்றது. மேலும் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

இந்நிலையில்தான் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன் பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கவும்  வாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி…

 

ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ்ஆப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

அதன் பின்பு செல்போனை ஹேக்கர்கள் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது, இந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது, சமீபத்தில் வெளியான வாட்ஸ்ஆப் (whatsapp information) அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும், அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்றும் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

இதையும் படிக்கவும்  Fingerprint Sensor – ல் பல விஷயம் உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement