Whatsapp Message Read Without Blue Tick
உலகில் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப்பும் ஒன்று. இந்த வாட்சப் மூலமாக வெளிநாட்டில் இருப்பவர்களிடம் கூட மெசேஜ் மற்றும் வீடியோ கால், வாய்ஸ் கால் என்று பேசுகிறோம். வாட்சப் பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய அப்டேட்களை வழங்கி வருகிறது. உங்கள் நண்பர் அனுப்பிய மெசேஜை பார்த்தாலும் பார்க்காதது போல அதாவது Blue tick வராமல் செய்வதற்கு Settings-யில் மாற்றுவோம். இல்லையென்றால் Notification-யில் பார்த்து விடுவோம். நீங்கள் Notification-யில் மெசஜ் பார்த்தாலும் நிறைய மெசேஜ் வந்தால் பார்க்க முடியாது. அதனால் இந்த பதிவில் Notification மற்றும் Settings-எதையும் மாற்றாமல் வாட்ஸப்பில் அனுப்பிய மெசேஜை நீங்கள் பார்த்தாலும் பார்க்காதது போல் பண்ணலாம். உடனே ஏதும் ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். எந்த வித ஆப்பும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Whatsapp Message Read Without Blue Tick:
ஸ்டெப்:1
உங்களுடைய போனில் Home screen-க்கு செல்லவும். பின் அதில் Long press செய்யவும்.
ஸ்டெப்:2
Long press செய்ததும் Widgets என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப்:3
Wid gets கிளிக் செய்ததும் கடைசியாக Whatsapp என்று இருக்கும். அதை கிளி செய்து Home screen -யில் வைத்து கொள்ளவும்.
ஸ்டெப்:4
பின் Whatsapp-யில் அனுப்பிய Message-யை இதன் மூலமாக பார்த்து கொள்ளலாம். எவ்வளவு பெரிய Message ஆக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |