Whatsapp New Updates in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஸ்மார்ட் போனின் பயன்பாடு முன்னேறி கொண்டே செல்கிறது என்று கூறலாம். அதுபோல வாட்ஸ்அப் நிறுவனம் மக்களுக்காக புது புது அம்சங்களை உருவாக்கி கொண்டே வருகிறது. அப்படி அதில் இருக்கும் ஒரு சிறப்பு அம்சத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அது என்ன அம்சம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா..? அப்போ அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.! |
Whatsapp Tricks in Tamil:
பொதுவாக நாம் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு போட்டோ அனுப்புகிறோம் என்றால், அதை அனுப்பி விட்டு உடனே Everyone Delete செய்து விடுவோம். அப்படி செய்தால் நாம் அனுப்பிய போட்டோ அவருக்கு முழுமையாக Delete ஆகிவிடும். ஆனால் இனி அப்படி அனுப்ப தேவையில்லை.
இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் ஒருவருக்கு Photo அனுப்பினால், அதை அவர் பார்த்த உடனே தானாக Delete ஆகிவிடும். அது எப்படி என்று கேட்கிறீர்களா..? அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப்பில் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும் பதிவுக்கு செல்லுங்கள்.
ஸ்டேப் -2
பின் அதில் ஏதாவது ஒரு போட்டோவை தெரிந்தெடுத்து கொள்ளுங்கள். பின் அதன் கீழ் ஒரு வட்டத்தின் உள் 1 இருப்பது போல ஒரு ஆப்சன் இருக்கும். அதை View One Time என்று சொல்லலாம்.
ஸ்டேப் -3
அதை கிளிக் செய்து அந்த போட்டோவை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு Send பண்ணுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது அவர் நீங்கள் அனுப்பிய போட்டோவை 1 முறை பார்த்த உடனே அந்த போட்டோ அவருக்கு தானாகவே Delete ஆகிவிடும். மறுபடியும் இந்த போட்டோவை ஓபன் செய்தால் அது அவருக்கு ஓபன் ஆகாது.உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.? |
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..! |
Whatsapp New Update in Tamil:
வாட்ஸ் அப்பில் ஒரு சில Message -யை நாம் Save செய்து வைத்துக் கொள்ள முடியும்.
அதற்கு முதலில் உங்களுடைய வாட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு Message -யை நீங்கள் Save செய்ய வேண்டும் என்று நினைத்தால், அந்த Message -யை Long Press செய்யுங்கள்.
பின் அதன் மேல் Star போன்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த Message Save ஆகிவிடும்.
அந்த Message -யை பார்ப்பதற்கு உங்களுடைய Whatsapp -ல் மேலே இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்தால் அதில் Starred Messages என்ற ஆப்சன் இருக்கும்.
அதில் தான் நீங்கள் Save செய்த Messages எல்லாம் இருக்கும். அதை நீங்கள் எப்பவேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.
Whatsapp- யில் இது தெரியாமல், யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா.? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |