WhatsApp-யில் இனி ஒரே நேரத்தில் பலருடன் Chat செய்யலாம்.. புதிய அப்டேட்

Advertisement

WhatsApp Desktop Working on Feature to Select Multiple Chats

உலகில் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒன்று தான் WhatsApp. WhatsApp மூலம் இந்த உலகில் நாம் எங்கு இருந்தாலும் நாம் பேச விரும்பும் நபரிடம் பேசமுடியும். இதன் காரணமாகவே பலகோடி மக்கள் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்துக்கொன்றன. இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதிய அப்டேட் WhatsApp Desktop பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது WhatsApp Desktop பயனர்களுக்கு Multiple Chat ஆப்ஷன்கள் வழங்க  உள்ளது. அதுகுறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

WhatsApp Update Feature 2023:WhatsApp

வாட்ஸ்அப் செயலி Desktop பயனர்களுக்கு Multiple Chat ஆப்ஷனை வழங்கவுள்ளது. சமீபத்தில் புதிய WhatsApp Avatars, Community, Status Reaction போன்ற புதுமையான வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. அதனை அடுத்து இந்த Multiple Chat ஆப்ஷனை வழங்க உள்ளது. இந்த வசதி அறிமுகம் ஆன பிறகு நீங்கள் WhatsApp Desktop-யில் ஒரே நேரத்தில் பலருடன் Chat செய்ய முடியும். அதேபோல் தேவை இல்லை என்றால் ஒரே நேரத்தில் அனைத்து சேட் பக்கங்களையும் மூடிவிடலாம்.

இதற்கு நாம் Chat Menu உள்ளே சென்றால் நமக்கு Select Chat ஆப்ஷன் கிடைக்கும்.

அதில் நாம் Mark, Mute, Read அல்லது Unread போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.

இது தற்பொழுது செய்யப்பட்டுவருகிறது. விரைவில் இது நேரடியாக அப்டேட் மூலமாக கிடைக்கும். அது வரை காத்திருப்போம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
WhatsApp Keyboard -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement