Youtube Tips and Tricks in Tamil
அனைவரும் தினமும் சாப்பிடுதல், தூங்குதல் மற்றும் குளித்தல் இதுபோன்ற வேலையினை செய்கிறோமோ இல்லையோ ஆனால் அனைவரும் கட்டாயமாக போனை யூஸ் செய்கிறோம். இதிலும் சிலர் போனே வாழ்க்கை என காலத்தை ஓட்டி கொண்டிருக்கிறார்கள். போனில் Whatsapp, Instagram, Twitter, Facebook மற்றும் Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை களித்து விடுகின்றனர். நம்முடைய போனில் நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து தான் அதில் நமக்கு நன்மை அல்லது தீமை இரண்டும் இருக்கிறது. சிலர் Youtube-ல் தான் எப்போதும் வீடியோவை பார்த்து கொண்டிருப்பார்கள். ஆனால் நமக்கு தெரியாத உபயோகம் உள்ள சில டிப்ஸ் Youtube-லும் இருக்கிறது. ஆகையால் அந்த டிப்ஸ் என்னென்ன என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Youtube Tips Tamil:
டிப்ஸ்- 1
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய Youtube-ல் 3 புள்ளிகள் இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு Settings என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது General என்பதை கிளிக் செய்து அதன் பிறகு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல Appearance-ஐ என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Dark theme என்பது On செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதனால் உங்களுடைய மொபைல் பேட்டரி Save ஆக இருக்கும். விரைவில் மொபைல் பழுதாகாமல் பார்த்து கொள்ள முடியும்.
இதையும் படியுங்கள்⇒ இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..!
டிப்ஸ்- 2
ஸ்டேப்- 1
நீங்கள் உங்களுடைய மொபைலில் Youtube-ல் உள்ள Settings-ற்குள் செல்லுங்கள். அதன் பிறகு அதில் General என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Remind me to take a break என்பதை On செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்ததாக Reminder frequency என்று வரும். அதில் 1 Hour 15 Mints என்று கொடுத்து Ok செய்து விடுங்கள்.
இது மாதிரி நீங்கள் செய்வதன் மூலம் Youtube-ல் தொடர்ச்சியாக வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென நீங்கள் தூங்கிவிட்டாலோ அல்லது குழந்தைகள் எதுவும் அதிக நேரம் Youtube பார்த்தாலும் இந்த Settings மூலம் அது தானாகவே Off ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |