ஆடு மற்றும் மாடுகளுக்கு இந்த சத்தான மசால் உருண்டை கொடுங்க..!

Advertisement

கால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை..!

விவசாயிகளின் உயிர்த் தோழனாகவும், விவசாயம் பொய்த்துப் போகும் போதும் அவர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு பெற்றவை கால்நடைகள். ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.

எனவே ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது. சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சரி வாங்க இப்போது இந்த பகுதில் கால்நடைகளை பாதுகாக்கும் முறையில், ஆடு மாடுகளுக்கு மூலிகை மசால் உருண்டை எப்படி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.

கறவை மாடுகளுக்கான மடிவீக்கம் நோய் குணமாக நாட்டு மருத்துவம்..!

மூலிகை மசால் உருண்டை செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. சீரகம் – 50 கிராம்.  10 நிமிடம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
  2. மிளகு – 10 கிராம்.  10 நிமிடம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
  3. தேங்காய் – அரை மூடி
  4. வெற்றிலை – 2
  5. ஆடாதோடை இலை – 2
  6. நுணா எனும் மஞ்சணத்தி இலை – 2
  7. ஓமவள்ளி இலை – ஒரு கைபிடி அளவு
  8. துளசி இலை – ஒரு கைபிடிஅளவு
  9. சித்தரத்தை – சிறிய துண்டு
  10. வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை- 50 கிராம்
  11. மஞ்சள் தூள் – 25 கிராம்( மஞ்சள் கிழங்கு)

மூலிகை மசால் உருண்டை செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரல் அல்லது மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும்.

கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு:

மாடுகளுக்கு ஒரு கைபிடியளவு உருண்டையும் ஆடுகளுக்கு கோழிக் குண்டு அளவு உருண்டைகளும் கொடுக்க வேண்டும்.

கொடுக்கும் முறை:

மாடுகளுக்கு அல்லது ஆடுகளுக்கு கொடுக்கும் பொழுது அவற்றின் நாக்கு பகுதியில் தடவிகொண்டே நாக்கை பிடித்துக் கொண்டு கடவாய் பகுதியில் உருண்டையை கொடுக்க வேண்டும் ஒரு நாட்களுக்கு இரண்டு முறை ஒரு மாத இடைவெளியில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இந்த மூலிகை மசால் உருண்டை பயன்கள்:

  1. இந்த மூலிகை உருண்டை கால்நடைகளுக்கு கொடுக்கும் பொழுது நன்றாக செரிமான சக்தியை கொடுக்கும்.
  2. கால்நடை சுறுசுறுப்பாக காணப்படும்.
  3. சளி இருக்காது.
  4. சாணம் கெட்டியாக போடும் – (களிச்சல் இருந்தால் பால் குறையும்)
  5. கால்நடை பளபளப்பாக இருக்கும்.
  6. உண்ணி இருக்காது.
  7. தீவனம், தண்ணீர் நன்றாக எடுக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.
Advertisement