நச்சுனு 10 பயனுள்ள சமையலறை டிப்ஸ் – உங்கள் நேரத்தை சேமிக்க IDEA..!

Kitchen tips in Tami

பயனுள்ள 10 சமயலறை குறிப்புகள்:

சமயலறை குறிப்பு (Kitchen tips in Tamil) 1:

பொதுவாக சமைப்பதற்கு அதிகளவு தேங்காயை பயன்படுத்துவோம். இந்த தேங்காயை சிலபேர் தேங்காய் துருவுப்பலகையால் துருவுவார்கள். சிலருக்கு தேங்காய் துருவுப்பலகையால் சரியாக துருவ தெரியாது. அவர்களுக்கான சமையலறை டிப்ஸ் இது.

தேங்காயை ஒரு 10 நிமிடங்கள் வரை பிரிட்ஜியில் வைத்து, பின்பு அவற்றை ஒரு கத்தியை கொண்டு பேத்து எடுத்தோம் என்றால் மிக சுலபமாக தேங்காய் வெளியே வந்து விடும்.

சமயலறை குறிப்பு (Kitchen tips in Tamil) 2:

தேங்காயை ஒரு மாதம் வரை கெடாமல் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ், தேங்காயை பலகையால் நன்றாக துருவி கொள்ளவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைக்கவும், வாணலி சூடேறியதும் துருவி வைத்துள்ள தேங்காவை அவற்றில் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்து கொள்ளவும். தேங்காயில் இருக்கும் ஈரப்பதம் போக்குவரை மிதமான சூட்டில் தேங்காயை வறுக்க வேண்டும்.

தேங்காய் நன்றாக வதங்கியதும் அவற்றை ஆறவைத்து ஒரு டப்பாவில் அடைத்து, பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும்.

அதாவது சமைப்பதற்கு தேவையான அளவு இந்த வதக்கி வைத்துள்ள தேங்காயை எடுத்து சமைப்பதற்கு பயன்படுத்தி கொண்டு, திரும்பவும் இந்த வதக்கிய தேங்காயை பிட்ஜியிலேயே வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

சமையலறை குறிப்பு (Kitchen tips in Tamil) 3:

நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரும்பு வடிகட்டியில் அதிகளவு டீ துகள்கள் அடைத்து கொள்ளும். இதன் காரணமாக டீ சரியாக வடிகட்ட முடியாது.

இதற்காக நாம் புதிதாக ஒரு டீ வடிகட்டிய வாங்குவோம். இருப்பினும் வீணாக அடிக்கடி டீ வலைக்கென்று பணம் செலவழிப்பதற்கு பதிலாக இதை டிரை செய்து பாருங்களேன்.

இந்த பழைய இரும்பு டீ வடிகட்டியை கேஸ் அடுப்பை பற்றவைத்து மிதமான சூட்டில் இந்த டீ வலையை ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பில் காட்டினால், அவற்றில் இருக்கு டீ துகள்கள் மிக எளிதில் எரிந்து விடும்.

அதன் பிறகு அவற்றை சுத்தமாக கழிவினால் அவற்றில் இருந்த அனைத்து துகள்களும் வெளியேறிவிடும்.

சமையலறை குறிப்பு (Kitchen tips in Tamil) 4:

நாம் சமைப்பதற்கு அதிகமாக பன்னீர் வாங்குவோம். இந்த பன்னீரை அப்படியே கவருடன் பிரிட்ஜியில் வைக்காமல் மூடி உள்ள ஒரு பிளாஸ்ட்டிக் டப்பாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இந்த பன்னீரை அவற்றில் வைத்து, பின்பு பிரிட்ஜியில் வைத்து பயன்படுத்தினால் அதிக நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

சமையலறை குறிப்பு (Kitchen tips in Tamil) 5:

நாம் தினமும் கேஸ் அடுப்பில் அதிகநேரம் சமைப்பதற்கு செலவழிப்போம், அப்போது ஏதேனும் பால் அல்லது ஏதேனும் ஒன்று அவற்றில் சிந்தி கொண்டுதான் இருக்கும். இதன் காரணமாக கேஸ் அடுப்பு ரொம்பவே கருப்பாக இருக்கும்.

இவற்றை சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இதற்கு lizol kitchen cleaner ஸ்ப்ரே வாங்கி தினமும் நாம் அடுப்பில் ஸ்ப்ரே செய்து, நன்றாக தேய்த்து வந்தால் அடுப்பு கிளீனாக இருக்கும்.

சமையலறை குறிப்பு(Kitchen tips in Tamil) 6:

தினமும் பெண்கள் அதிகமாக வீட்டில் இருக்கும் சமைத்த பாத்திரங்களை விளக்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் கைகள் மிகவும் கருமையாக இருக்கும். எனவே கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொண்டு பாத்திரம் கழிவினால் கைகள் பாதுகாக்கப்பட்டு மிகவும் மிருதுவாக இருக்கும்.

பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

சமையலறை டிப்ஸ் 7:

நம் வீட்டில் தயிர் உறை ஊற்றுவதற்கு தயிர் தீந்துவிட்டது என்றால் இனி கவலைப்பட அவசியம் இல்லை. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு காச்சிய பாலை எடுத்து கொள்ளவும்.

அவற்றுள் காய்ந்த மிளகாயை காம்புடன் போட்டு இரவு முழுவதும் வைத்திருங்கள். மறுநாள் காலையில் இந்த பாலை பார்த்தால் நன்கு கெட்டியாக இருக்கும். இவற்றை எடுத்து நாம் தயிர் உரை ஊற்றுவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த முறை தயிர் உரை ஊற்றுவதற்கு மட்டுமே பொருந்தும்.

சமையலறை குறிப்பு 8:

நாம் அதிகமாக சமைப்பதற்கு எலுமிச்சையை பயன்படுத்துவோம். இதன் காரணமாக எலுமிச்சை பழத்தை வாங்குவோம். இவற்றை நாம் பிரிட்ஜியில் வைத்தாலும் சில நாட்களில் காய்ந்து விடும். இந்த எலுமிச்சை பழம் காய்ந்து விட்டால் குப்பையில் தூக்கி எரிந்து விடுவோம் அல்லவா இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம்.

ஒரு பாத்திரத்தில் சூடான் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அவற்றில் இந்த காய்ந்த எலுமிச்சை பழத்தை போட்டு ஒரு பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு அவற்றை எடுத்து பார்த்தால். நன்றாக பழுத்த பழம் போல் அமுங்கும். பின்பு அவற்றில் இருக்கும் சாறை பிழிந்து சமைப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

சமையலறை குறிப்பு 9:

சப்பாத்தி மாவு பிசையும் போது சூடான் பால் அல்லது வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

சமையலறை குறைப்பு (Kitchen tips in Tamil) 10:

இட்லி மாவை என்ன தான் பிரிட்ஜியில் வைத்தாலும் சிலர் வீட்டில் மாவு புளித்து விடும். இதற்கு பிரிட்ஜி ஒன்றும் காரணம் இல்லை. நாம் இட்லி மாவை பிளாஸ்ட்டிக் டப்பாவில் வைத்து கற்று புகாத அளவிற்கு மூடி பிரிட்ஜியில் வைத்தோம் என்றால் இட்லி மாவு புளித்து போகாது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.